பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 பெரியபுராணம்- ஓர் ஆய்வு சமணத்துறவியாவார். அப்படியானால் அவர் சிவன் பெயரைக் கூறுவதில் தடை ஒன்றும் இருக்க முடியாது என்றுதானே நினைப்போம். ஆனால் சிவபெருமானைப் பற்றிப் பல இடங் களில் பேச வேண்டிய வாய்ப்பு இருந்தும் ஒவ்வோர் இடத்திலும் அவனை அடையாளச் சொற்களாற் குறிக்கின்றாரே அன்றிச் சிவன் என்ற பெயரைக் கூறவே இல்லை. மேலும் பல தெய்வங் களின் பெயர்களையும் சிவபெருமான் பெயருடன் சேர்த்துக் கூற வேண்டிய சூழ்நிலையில் அவர் பேசும் திறம் அவர் மன நிலையை வெளிக் காட்டுவதாகவும் உளது. 'பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும் வால்வளை மேனி வாலியோன் கோயிலும் நீலமேனி நெடியோன் கோயிலும் ' என்று கூறுவார். இங்கு, பெரியோன் என்று கூறுவதுடன் நில்லாமல் பிறவா யாக்கை என்ற அடைமொழி தருவதும் கவனிக்கப் படல்வேண்டும். இனி மதுரைக் காண்டத்தில் வேட்டுவ வரியில், சிவபிரான் உமை என்பவர்கள் பற்றி விரிவாகப் பேசுகிறார். 'மதியின் வெண்தோடு சூடுஞ் சென்னி நுதல்கிழித்து விழித்த இமையா நாட்டத்து நஞ்சுண்டு கறுத்த கண்டி, வெஞ் சினத்து அரவுநாண் பூட்டி நெடுமலை வளைத்தோள் வளையுடைக் கையில் சூலம் ஏந்தி கரியின் உரிவை போர்த்து......... * 42 இறைவன் உமையொரு பாகனாக இருத்தலின் அவன் வடிவை, செயலை எல்லாம் அவள் மேல் ஏற்றிப் பாடுவது எளிதாயிற்று இனி, இதனை அடுத்து வரும் உரைப்பாட்டு நடையில் சிவபிரான் பற்றி அந்நாளில் வழங்கிய குறிப்புக்கள் பலவும் இடம் பெறுகின்றன. -

  • * * * * * * * * * * * * * * * * * *

பாகம் ஆளுடை யாள் பலி முன்றிலே திங்கள் வாழ் சடையாள் திருமுன்றிலே