90 பெரியபுராணம்- ஓர் ஆய்வு சங்கத் தொகுப்புள் இடம் பெறாத இந்த உமையொரு பாகன் குறிப்பு இப் புலவர் பாடிய மூன்று கடவுள் வாழ்த்துக்களி லும் விடாமல் இடம்பெற்றுள்ளது என்பதை நோக்கவேண்டும். புறம், அகம், ஐங்குறுநூறு ஆகிய மூன்று நூல்களின் கடவுள் வாழ்த்துப் பாடல்களிலும் உமையொருபாகன் குறிப்பு வருகிறது. இதனைச் சிந்திக்கும்பொழுதே சிலப்பதிகார ஆசிரியர் வேட்டுவ வரியில் உமை பற்றிக் கூறியவற்றையும் உடன் கொண்டு ஆய வேண்டியதன் இன்றியமையாமை வெளிப்படும். பாகம் ஆளுடையாள்', 'திங்கள் வாழ் சடையாள்', 'ஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரி உடுத்து' என்பவை உமையொருபாகன் என்று காணும்பொழுது நியாயமாகவே படுகிறது. ஒரு பாகத்தில் உள்ளவருக்கு அடுத்த பாகத்திற்கு உரியவற்றை ஏற்றிக் கூறுவதில் தவறு ஒன்றும் இல்லை. அதுவே தன் கருத்து என்பதை ஒத்துக் கொள்பவர் போல அடிகள் 9 ஆம் பாடலில், 'கங்கை முடிக்கனிந்த கண்ணுதலோன் பாகத்து மங்கை உருவாய் மறையேத்த வேநிற்பாய் " என்று கூறிச் செல்கிறார். 'சங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்தி செங்கண் அரிமால் சினவிடைமேல் நின்றாயால்', 'திருவ மாற்கு இளையாள்திரு முன்றிலே’ என்ற கருத்துப் புதி தாகப் புகுந்தது. உமை திருமாலின் தங்கை என்பதும் புதிய கருத்து. அடுத்து இளங்கோ புதிதாகக் கூறிய ஒரு கருத்தையும் ஆழ்ந்து சிந்திக்கவேண்டும். 'வரிவளைக்கை வாளேந்தி மாமயிடன் செற்று கரிய திரிகோட்டுக் கலைமிசைமேல் நின்றாயால் அரி, அரன், பூ மேலோன் அகமலர் மேல் மன்னும் விரிகதிர் அஞ்சோதி விளக்காகியே நிற்பாய்' " என்ற இப் பாடலின் இறுதி இரண்டு அடிகள் சாக்தம் பெருகி வளர்ந்த நிலையில் தோன்றிய கருத்துக்களாகும். உமை இறைவனின் ஒரு பாகத்தில் உறைபவள் என்ற கருத்துக்கும் 'அரி அரன் பூமேலோன் அகமலர் மேல் மன்னும் உமை என்று கூறும் கருத்துக்கும் கடல் போன்ற வேற்றுமை உண்டு. இதுவரைத் தமிழகத்தில் சாக்தம் புகுந்து பரவிற்று என்பதை அறிய நமக்கு எவ்விதச் சான்றும் இல்லை. ஆனால் நன்கு பரவி இருந்தது என இச் சமணத் துறவியார் போகிற போக்கில் பேசிச் செல்கிறார். அரி, அரன், நான்முகன் என்ற மூவர் இருதய கமலங்களிலும் தங்குபவள் துர்க்கை என்பதே கடை இரண்டு அடிகளின் பொருள்.
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/118
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை