பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 பெரியபுராணம்- ஓர் ஆய்வு தெண்ணிர்க் கரந்த செஞ்சடைக் கடவுள் வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின் ஆங்கு அது வாங்கி அணிமணிப் புயத்துத் தாங்கினன் ஆகி............... * 4 என்று ஒரு செய்தியையும் சேர்த்துக் கூறவேண்டிய சூழ்நிலை என்ன என்று சிந்திக்க வேண்டும். 'அறிதுயில் அமர்ந்தோன் சேடம்' என்றும் 'தெண்ணிர்க் கரந்த செஞ்சடைக் கடவுள் வண்ணச் சேவடி...' என்றும் கூறுகையில் 'கடவுள்' என்ற சொல்லை எங்கே எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதையும் கவனித்தல் வேண்டும். அருக சமயத்தைச் சேர்ந்த ஒருவர் இவ்வாறு கூற வேண்டுமாயின் அவர் காலத்துச் சிவ வழிபாடு பெற்றிருந்த முக்கியத்துவத்தைக் குறிப்பதற்கே இதனைச் சேர்த்துக் கூறுகிறார் என்பது தேற்றம். எனவே இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் தமிழகத்தில் பெருவழக்காய்ப் பண்டு தொட்டு நின்று வளர்ந்த சைவம் ஆரவாரமில்லாமல் ஒரு பெரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது என்பதைச் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. தமிழகத்தில் மிகப் பழங்காலத்திலேயே நுழைந்துவிட்ட வேத வழக்கொடுபட்ட சமயம், இடையே புகுந்த சாக்த சமயம், பண்டு தொட்டே இங்குப் புகுந்து பிறருக்கு இடையூறு அதுவரை செய்யா மல் இருந்த சைன சமயம், அதிக இடம் பெறவில்லை எனினும் நிலைபேற்றை ஒரளவு பெற்றுவிட்ட பெளத்தம் ஆகிய சமயங் களுடன் தொல் பழஞ் சமயமாகிய சைவ சமயம் போரிட வேண்டிய நிலை வந்திருத்தலைக் காண முடிகிறது. இவை அனைத்தும் தமிழக எல்லைக்கு வெளியே இருந்து இங்கு நுழைந்து நிலைபேற்றுக்கும் வளர்ச்சிக்கும் போராடிய சமயங்கள் என்பதையும் மனத்துட் கொள்ள வேண்டும். இனி உள் நாட்டில் சைவத்தை அடுத்து வளர்ந்த வைணவ மும் இடத்திற்குப் போரிட்டதைக் காட்டவே அடிகளார் 'சேடங் கொண்டு சிலர் நின்று ஏத்தி'யதையும் அதை வாங்கி மன்னன் தோளில் அணிந்ததையும் விரிவாகவும் குறிப்பாகவும் கூறரிச் செல்கிறார். இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் பரிபாடல் என்ற நூலை நாம் பார்க்க வேண்டும். இந்நூல் முழுவதும் கிடைக்காமல் 24 பாடல்களே கிடைத்துள்ளன. அவ்ற்றுள் வையை ஆற்றைப் பற்றி 9 முருகனைப் பற்றி 8 , திருமால்