காப்பிய காலம்வரை சிவன் 95 ஒருங்கிணைப்பு முயற்சியின் சிறந்த எடுத்துக்காட்டாகும். அன்றி யும் முருகனுடைய முகங்களையும் அவற்றின் தொழில்களையும் கூற வந்த நக்கீரர் 'மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வியோர்க் கும்மே......... * 53 என்று கூறுகிறார். அதாவது பிராமணங்களில் கூறுப்பெற்ற முறையில் செய்யப்படும் மந்திர வேள்வியைப் பாதுகாக்கும் ஒரு முகம் என்கிறார். வேத வேள்வி பேசப்படும் காலத்தில் இத்தகைய ருகனையோ சுப்பிரமணியனையோ யாரும் நினைத்தது கூட ಫ್ಲಿ... பெளராணிகக் காலத்தில் (ஸ்காந்தம்) தோன்றிய சுப்பிரமணியனை மிகப் பழைய தமிழர் தெய்வமாகிய முருகனி டம் இணைத்து வடதிசையில் தோன்றிய வேத வழிப்பட்ட யாகத்தையும் வேலன் வெறியாட்டையும் ஒருங்கிணைத்து அவ்வேள்விக் கடனைப் பாதுகாக்கிறான் முருகன் என்று கூறு வதும் முன்னர்க் கூறுப்பெற்ற ஒருங்கிணைப்பு முயற்சியின் மற்றொரு வகையேயாம். பரிபாடல் இரண்டு சமயங்களின் போராட்டத்தை அறிவிக்கின்றது. இனி, பரிபாடலில் உள்ள திருமால்பற்றிய பாடல்களையும் முருகன் பற்றிய பாடல்களையும் காண்பதில் சில உண்மைகளை அறியலாம். 'தி, வளி, விசும்பும், நிலன், நீர் ஐந்தும் ஞாயிறும் திங்களும் அறனும் ஐவரும் திதியின் சிறாரும் விதியின் மக்களும் மாசி லெண்மரும் பதினொரு கபிலரும் தாமா இருவரும் தருமனு மடங்கலும் மூவேழ் உலகமும் உலகினுண் மன்பதும் மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம்' (அறன்-வேள்வி முதல்வன், ஐந்து-செவ்வாய் முதல் சனி ஈறாக உள்ள கோள்கள்; திதியின் சிறார்-அசுரர்; விதியின் மக்கள்-பன்னிரு ஆதித்தர்கள்; எண்மர்-அஷ்ட வசுக்கள்; பதினொரு கபிலர்-ஏகாதசருத்திரர், தாமா இருவர்-விலங்கில் தோன்றிய அஸ்வினி தேவர் இருவர்; தருமன்-யமன், மடங்கல் யமனுக்குப் பணி செய்யும் கூற்றம்.) இவ்வரிகள் 33 தேவர்களைக் கூறி இவர்கள் நின்பால் தோன்றினர் எனத் திருமாலை விரித்துக் கூறுகிறார் கடுவன் இளவெயினனார் என்ற புலவர். இதே பரிபாடலில் உள்ள 8ஆம் பாடல் முருகனைப் பற்றிக் கூறத் தொடங்கி இந்த முப்பத்து மூவரையும் தொகைப் படுத்தி 54
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/123
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை