பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 பெரியபுராணம்- ஓர் ஆய்வு இவர்களும் மும்மூர்த்திகளும் முருகனை வழிபடுவான் வேண்டித் திருப்பரங்குன்றத்தில் தவங் கிடக்கின்றனர் எனப் பேசுகிறது. ‘மண்மிசை அவிழ்துழாய் மலர்தரு செல்வத்துப் புள்மிசைக் கொடியோனும் புங்கவம் ஊர்வோனும் மலர்மிசை முதல்வனும் மற்றவன் இடைத்தோன்றி உலகிருள் அகற்றிய பதின்மரும் இருவரும் மருந்துரை இருவரும் திருந்துநூல் எண்மரும் ஆதிரை முதல்வனிற் கிளந்த நாதர்பன் னொருவரும் நன்றிசை காப்போரும் யாவரும் பிறரு மமரரும் அவுணரும் இந்த முப்பத்து மூவர் பட்டியல் வேதாகமங்களில் கிடைக்கும் பட்டியல். திருமாலைப் பாடுபவரும், முருகனைப் பாடுபவரும் இந்தப் பட்டியலைப் பயன்படுத்தித் தம் தம் தெய்வத்தைக் காண இவர்கள் காத்துள்ளனர் என்று கூறுவது ஒரு வகையான அமைதி யான சமயப் போராட்டத்தையே அறிவுறுத்துகின்றன. இவ்விரண்டு பாடல்களும் சங்கப் பாடல் தொகுப்பினுள் அடங்கும். அவ்வாறாயின் சமயப் போராட்டம் இவற்றிடையே இருப்பதாகக் கூறலாமா? இவை தோன்றிய பின் இருநூறு ஆண்டு கள் கழித்துத் தோன்றிய சிலப்பதிகாரத்தில் அத்துணை அளவு சமயப் பொறை காணப்படும் பொழுது, முன்னர்த் தோன்றிய இப்பாடல்கள் சமயப் போராட்டத்தை அறிவிப்பன என்று கூறுதல் பொருந்துமா என்ற ஐயம் தோன்றுதல் சரியே! இத்தகைய ஐயத்திற்கு விடை காண முற்படுகையில் விருப்பு வெறுப்பில்லாமல் உலகில் தோன்றிய பல்வேறு சமய வரலாறு களை நோக்க வேண்டும். சமயப் பூசல் இருவகைப்படும். முதல்வகை ஒரே நாட்டில் முகிழ்ந்த, பல் கருத்துக்களைப் பெரும்பாலும் தம்முள் பொது வாகக் கொண்டிருக்கின்ற ஒரு சமயத்தின் இரு பிரிவுகளிடையே நேரும் பூசல், இரண்டாம் வகைமுற்றிலும் மாறுபட்ட வேறு வேறு இடங்களில் தோன்றி வளர்ந்த இரு வேறு சமயங்களிடையே உண்டாகும் பூசல். ஒரே நாட்டில் தோன்றிய ஒரே சமயம் இரண்டாகப் பிளந்து தம்முள் போரிடுவதும் அல்லது ஒரே நாட்டில் தோன்றிய இரு வேறு சமயங்கள் தம்முள் போரிடுவதும் இத் தொகுப்பினுள் அடங்கும். இரண்டாகப் பிளந்த இரு சமயங்கள் தம்முள்