பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய காலம்வரை சிவன் 97 போரிடுவதற்கு உதாரணம், கிறித்துவர்களுள் கத்தோலிக்கர், பிராடஸ்டண்டுகள் இடையே நடந்த போராட்டமாகும். எத்தனை ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். எத்தனை ஆயிரம் பேர் தீக்கொளுத்தப்பட்டனர் என்பதை அச் சமய வரலாறு அறிபவர்கள் அறிந்து கொள்ள முடியும். இஸ்லாம் சமயத்தார் வியாக்கள், சுன்னிகள் எனப் பிரிந்து, இன்றும் நடத்தும் போராட்டம் பிறிதொரு உதாரணம் ஆகும். ஒரே நாட்டில் தோன்றிய இரு வேறுபட்ட சமயப் போராட்டத்திற்கு உதாரணம் தமிழகத்தில் தோன்றிய சைவ வைணவப் போராட்டம், சங்ககால இறுதியில் நடைபெற்ற முருகன், திருமால் அன்பர்கள் போராட்டம் என்பவையாம். இவற்றின் வேறாகப் பிறவிடங்களில் பிறந்து மற்றோர் நாட்டில் குடியேறிய சமயம், முதல் பிரிவினரைப் போல நேரடி யாகப் புகுந்தவிடத்துள்ள சமயத்துடன் மோத முடியாது. முதற் பகுதிப் போராட்டத்தில் ஈடுபட்ட இரு கட்சியினரும் ஒரே நாட்டில் ஒரு பகுதியில் தோன்றியமையாலும் ஒரே சமயத்தில் ஏற்பட்ட பிளவுகளாகையாலும் இரு கட்சிகட்கும் அன்பர்கள் நிரம்ப இருப்பர். மேலும் இரு கட்சிகளுக்கும் அரசியல் செல்வாக்கு இருக்கும். அதனால் அவர்கள் மோதல் வலுவாகவும், கொடுமையாகவும் அமையும். ஆனால் இதன் எதிராக வந்தேறிகளான சமயங்கள் உள் நாட்டில் நிலைபெற்ற சமயங்களுடன் நேரிடைத் தாக்குதலில் ஈடுபட முடியாது. தொடக்கத்திலேயே நேரிடைத் தாக்குதலில் இறங்கினால் வந்தேறிகள் உடன் அழிக்கப்படுபவர். எனவேதான் அவர்கள் நேரிடைத் தாக்குதலில் இறங்குவதில்லை. தமிழகத் தைப் பொறுத்தவரை புத்தம், சமணம் என்ற இரண்டுமே வந்தேறிகள்தாம். என்றாலும், தமிழகத்தில் சமணர் நடந்து கொண்டது போலப் பெளத்தர்கள் நடந்து கொள்ளவில்லை என்பதை அறிய முடிகிறது. வந்தேறிகளாக உள்ளவர்கள் தம் கொள்கைகளைப் பரப்ப வேண்டுமாயின் எந்தப் பகுதிக்கு வந்தார்களோ அவர்களுடன் சுமுகமான உறவு கொண்டு, அவர்கள் மொழியைக் கற்று, அவர்கள் பழக்க வழக்கங்களிலும் சிலவற்றை மேற்கொண்டு தம் வேறுபாட்டை அதிகம் வெளியில் காட்டாமல் இருத்தல் வேண்டும். நாளாவட்டத்தில் இவர்கள் வந்தேறிகள் என்பதை உள்நாட்டார் மறந்து இவர்களுடன் வேறுபாடின்றி இணைகின்ற காலத்தில் கொஞ்சங் கொஞ்சமாகத் தம் சமயத்தைப் பரப்ப வேண்டும்.