பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 8 பெரியபுராணம்- ஓர் ஆய்வு இந்தக் கொள்கையை அறிந்து நன்கு கடைப்பிடித்தவர்கள் தம் சமயத்தைப் பரப்ப முடிந்தது. தொடக்கத்தில் வேத வழக் கொடுபட்ட வைதிக சமயத்தவர்கள், அடுத்துச் சமணர்கள், சமீப காலத்தில் கிறித்துவர்கள் என்ற இந்த மூன்று சமயத்தினரும் இக் கொள்கையின் மனத் தத்துவத்தை நன்குணர்ந்து அதன்படி நடந்து கொண்டனர். தொடக்கத்தில் இங்கு நுழைந்த வைதிக மதத்தினர் இங்குத் தொல்பழங்காலமாக வழங்கிய சிவவழிபாடு, திருமால் வழிபாடு என்பவற்றை மெல்ல மெல்ல ஏற்றுத் தம் வைதிக சமயத்திலும் அவற்றுக்கு இடம் கொடுத்தனர். தங்கள் வேதம் வேள்வி என்பவற்றையும் இங்குப் புகுத்தினர். நாளா வட்டத்தில் எந்தக் கொள்கை யாருடையது என்று வேறுபாடு காண முடியாதபடி இவை ஒருங்கிணைந்து விட்டன. அடுத்து இங்கு நுழைந்த சமணம் மெள்ள இங்குள்ள மொழியைக் கற்றுக் கொண்டு இந்த மொழியில் தம் சமயக் கொள்கைகளை விளக்கும் நூல்களை வெளியிட்டது. தமிழர் ஏற்று வாழ்ந்த சிவனையும் திருமாலையும் ஏற்றுக் கொள்வதன் மூலம் வைதிக சமயம் இங்கு நிலைத்தது. சமணம் இந்நாட்டில் கால் கொள்ளக் காரணம் சமணர் இத் தமிழரின் தெய்வங்களை ஏற்றுக் கொள்ள முடியாத சமயக் கோட்பாடு உடையவர்கள். என்றாலும் தமிழகத்தில் புகுந்த அவர்கள் தமிழைக் கற்றுக் கொண்டு தமிழ்ப் பற்றை வெளியிடு முறையில் தமிழர்களாகவே ஆயினர். தமிழனைப் பொறுத்தமட்டில் அவனுடைய கடவுட் பற்றைப் போலவே மொழிப் பற்றும் அவனுக்கு உண்டு. எனவே சமணர் காட்டிய தமிழ்ப் பற்றும், சங்க காலத்தை அடுத்து வந்த காப்பிய காலத்தில் இளங்கோ போன்றவர்கள் காட்டிய சமயப் பொறை யும் இத்தமிழர்களைக் கவர்ந்தன. எனவே சமணம் இங்கு நிலைத்துவிட்டது. பெளத்தம் நிலையாமைக்குக் காரணம் சமணமும், பெளத்தமும் ஏறத்தாழ ஒரே கால கட்டத்தில் வடநாட்டில் தோன்றி வளர்ந்து தமிழகத்துள் நுழைந்தவைதாம். என்றாலும் என்ன? சமணம் நிலைத்தது போலப் பெளத்தம் ஏன் நிலைக்கவில்லை? பெளத்த சமயத்திற்குரிய தர்க்க நூல்களை எழுதிக் குவித்தவர்கள் இத் தமிழகத்தில் தோன்றிய அதுவும் சிறப்பாகக் கல்வியில் கரையிலாத காஞ்சி மாநகர்த் தோன்றிய தமிழர்களேயாவர். லென் புத்திஸம் என வழங்கப்