தேவார காலத்துக்கு முந்தைய சிவன் 1 0 3 பிரர்கள் பாண்டியர்களை வென்றடிப்படுத்தி அங்கேயே தங்கி ஆட்சி புரிந்தனர். இக் கூட்டத்தாருள் மற்றொரு சாரார் சோணாட்டைப்பிடித்துக் காவிரிப் பூம்பட்டினத்தைத் தலை நகராகக் கொண்டு ஆண்டனர். மூன்றாம் பிரிவினர் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டில் காலூன்றினர். இவர்களுள் பாண்டி நாட்டிலும் தொண்டை நாட்டிலும் வந்து தங்கியவர்கள் சமணராகவும், சோணாட்டில் தங்கியவர் கள் பெளத்தர்களாகவும் இருந்தனர் என்பது அவர் முடிவு. இவர்கள் அரச குலத்தினர் அல்லர்; எனவே பண்பு முதலிய வற்றை இவர்கள்பால் எதிர்பார்ப்பது சரியன்று. அரசாட்சியைக் கைப்பற்றிய பின்னர்த் தத்தம் சமயத்தை மக்களிடைத் திணிக்க முயன்றனர். இவர்களைப் பற்றிக் குறிப்பிடும் வேள்விக்குடி அறமுறியின் தமிழ்ப்பகுதியில்கூட இவர்கள் பெயரைக் குறிப்பிடும் பொழுது பிராக்ருத மொழியே பயன்படுத்தப்படுகிறது. எனவே இவர்கள் பெயரைத் தமிழால் எழுத முயன்ற பிற்காலத்தார் களப்பிரர் என்றும் களப்பாளர் என்றும் பல்வேறு வகையாக எழுதினர். பரம்பரையாக அரசராக இல்லாத இவர்கள் கொள்ளைக் கூட்டத்தார் என்றும் நினைய வேண்டியுளது. இவர்கள் பிராக்ருதம், கன்னடம் (வளர்ச்சி அடையாத நிலை) என்ற மொழிகளையே பேசியவர்கள் என்றும் தெரிகிறது. களப்பிரர் புகுந்த பிறகுதான் தமிழகத்தில் சைன சமயம் புகுந்தது என்று நினைப்பதும் சரியன்று. சங்க காலத்திலேயே தமிழகத்தில் சைனமும் பெளத்தமும் இருந்தன. ஆனால் இச் சமயத்தாருள் யாரும் அரசியல் செல்வாக்குத் தேடினதாகவோ, மதமாற்றம் செய்ய முயன்றதாகவோ தெரியவில்லை. துறவை வற்புறுத்தும் சமணர்கள் அமைதியான சூழ்நிலையில் குகைகளி லும் ஒதுக்கிடங்களிலும் தங்கி வாழ்ந்தனர். வேள்விக்குடி அறமுறியின்படி இவர்களை வென்று துரத்திய வன் கடுங்கோன் என்ற பாண்டியனாவான். அரசியல் செல்வாக்குடன் பாண்டி நாட்டில் வாழத் தலைப்பட்ட இவர்கள் தம் கொள்கைகளை வலுக்கட்டாயமாக இந் நாட்டு மக்களிடைப் புகுத்தினர். தம் சமயக் கொள்கைகளின் உயிர் நாடியாக விளங்கும் அஹிம்சைக் கொள்கையை அரசியல் இலாபத்திற் காகக் காற்றில் பறக்கவிட்டனர்.
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/131
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை