பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார காலத்துக்கு முந்தைய சிவன் I 0.5 நம்பி பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியில் சுந்தரர் சொல்லாத, சேக்கிழாரும் ஏற்றுக் கொள்ளாத பல செய்திகள் உள்ளன. உதாரணமாக இரண்டை மட்டும் காணலாம். கூற்றுவநாயனார் பற்றிய பாடலுக்கு அடுத்த பாடல் சுந்தரர் பற்றிய பாடலாகும். இதில், {

  • - - - - - - - இன் அடைக்

காயும் இடுதரும் கோல் தொத்தும் கூனனும் கூன் போய் குருடனும் கண்பெற்றமை சாற்றித் திரியும் பழமொழி ஆம் இத்தரணியிலே " என்று பாடுகிறார். சுந்தரருக்குத் தொண்டு செய்த கூணன் ஒருவன் கூன் ஒழிந்தமையும், குருடன் ஒருவன் கண் பெற்றமை யும் நாடறிந்த செய்தி என்கிறார் நம்பியாண்டார் நம்பி. அடுத்து 69 ஆம் பாடலில் திடுக்கிடும் தகவல் ஒன்றையும் கூறுகிறார் நம்பி. சங்கிலியாரை மணம் பேசி வந்தவன் இறந்து விட்டானாகலின் அவர் கன்னிமாடத்திருந்தார். திலகவதியார் வரலாற்றை நினைவிற்கொண்ட நம்பிகள் மணம் பேசியவன் இறந்து விட்டமையின் சங்கிலியாரை மங்கல நாண் இழந்தவர் என்று பாடுகிறார். ஒருபடி மேலே சென்று ஊரார் சிரிக்கும் காரியத்தை வீரத்துடன் நம்பியாரூரர் செய்தார் என்றும் பாடுகிறார். - 'தகுமகள் பேசினோன் iயவே நூல்போன சங்கிலிபால் புகுமணக் காதலினால் ஒற்றி யூர்உறை புண்ணியன் தன் மிகுமலர்ப் பாதம் பணிந்தரு ளால்இவ் வியனுலகம் நகும் வழக் கேநன்மை யாப்புணர்ந் தான் நாவ லூர் அரசே! " இவ்விரண்டு செய்திகளும் அன்று நாட்டார் நாவில் இடம் பெற்றவை என நம்பியாண்டார் நம்பி அவற்றைத் தம் பாடலில் கூறினார். ஆனால் சேக்கிழார் இவற்றை எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. எனவே இச் செய்திகளைப் பாடாமல் விட்டு விட்டார். கூணன், குருடன், செய்திகள் எங்கு, எப்பொழுது