I 0.8 பெரியபுராணம் - ஓர் ஆய்வு 'படர்புனல் கன்னி நாட்டு ஒர் பட்டினம் மருங்கு சார்ந்தான் 12 என்றும் அப்பதிதன்னில்...... திருமண வதுவை செய்தான் என்றுமே பெரியபுராணங் கூறுகிறது. பட்டினம் என்று பெரிய புராணம் கூறுவதால் அது கடற்கரையை அடுத்த ஊராகவும் இருக்கலாம். அடுத்துப் புனிதவதியாரை அவர் கணவனிடம் கொண்டு சேர்க்கச் சென்ற சுற்றத்தார் 'பாண்டி நாட்டோர் மாநகர் தன்னில்' அவன் இருக்கிறான் என்று அறிந்து அம்மையாரைச் சிவிகை ஏற்றி, 'மலர் புகழ் பரம தத்தன் மாநகர் மருங்கு வந்து' ' தாம் வந்திருக்கும் செய்தியை அவனுக்குத் தெரி வித்தார்கள் என்றுதான் பெரியபுராணம் கூறுகிறது. எந்த ஒர் இடத்திலும் பரமதத்தன் தங்கியது 'மதுரை மாநகரில் என்று புராணம் பேசவில்லை. அப்படி இருக்க இது மதுரையில் நடந்த தாகப் பேராசிரியர் கூறுவது வியப்பே எந்த ஆதாரத்தைக் கொண்டு? என்று தெரியவில்லை. அம்மையார் தன் கணவனுடன் மறுவாழ்வு தொடங்காமல் பேய் வடிவு பெற்றுப் போனது எதனால் என்று கூறவந்த பேராசிரியர் 'மதுரை அந்நாளில் களப்பிரர் வசம் இருந்தது; சிவ பக்தியும் அடியார்க்கு உணவிடுதலும் தம் கடமை என்று நினைத்த அம்மையார் அத்தகைய வாழ்க்கையை மதுரையில் நடத்த முடியாது என்று கருதி மதுரையை விட்டு ஒடிப்போனார்' என்று எழுதுவது வேடிக்கையாகவும் வேதனை தருவதாகவும் உள்ளது. இவர் கூற்றுப்படிப் பார்த்தால் காரைக்கால் அம்மையின் காலத் தில் மதுரை போன்ற ஊர்களில் அடியார் தொண்டு செய்யும் சைவ மக்களே இல்லையோ என்று நினைக்கத் தோன்றுகிறது. கூன் பாண்டியன் நாளில்கூட மதுரை அவ்வளவு இழிநிலைக்குச் சென்று விடவில்லை. இத்துடன் நிறுத்தாமல் சேக்கிழார் பல நிகழ்ச்சிகளை விரிவாகக் கூறி ஒரு சூழ்ச்சி அமைப்பையே வெளி யிடுகிறார். இந்தப் புற அழகை எல்லாம் ஒதுக்கி விட்டுப் பார்த் தால் நான் கூறியது உண்மை என விளங்கும் என்றும் கூறுகிறார் பேராசிரியர். சேக்கிழாரை ஒதுக்கி விட்டுக் கதையைக் காண விழையும் பேராசிரியர் இக்கதையே சேக்கிழார் தந்ததுதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர் தந்த கதையில், அவர் கூறுவனவற்றில் சிலவற்றை எடுத்துக் கொண்டு சிலவற்றை விடுவதைத் திறனாய்வாளர், சான்றியல் சட்ட வல்லுநர் என்ற இருவரும் ஒப்ப மாட்டார்கள். மதுரையில் களப்பிரர் கொடுமை இருந்தது என்று கூற விரும்பிய பேராசிரியர், அதற்காகக் காரைக் கால் அம்மையின் கணவன் போகாத மதுரைக்குப் போனதாக
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/136
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை