பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 1 O. பெரியபுராணம்- ஓர் ஆய்வு "எள்ளும் செயல் வன்மைகள் எல்லை இல்லாத செய்யத் தள்ளும் செயல் இல்லவர் சந்தனக் காப்புத் தேடி கொள்ளும் துறையும் அடைத்தான் கொடுங்கோன்மை செய்வான் " என்ற பாடலில் குறிக்கின்றார். ஒவ்வொருவரும் தத்தம் சமயத் தைப் பரப்பச் செய்யும் முயற்சி வேறு; அதிகாரத்தில் இருப்பவர்கள் பிற சமயத்தாரைக் கொடுழைப்படுத்துவது. வேறு. இவ்வாறு தனி மனித உரிமையைப் பறிக்கும் அம்மன்னனை 'கொடுங் கோன்மை செய்வான்' என்று ஆசிரியர் கூறிச் செல்கின்றார். இந்த நிலையிலும் தமிழகத்தில் சிவ வழிபாடு தொடர்ந்து நடந்துதான்வந்துள்ளது என்றால் இத் தமிழர் கண்ட சிவநெறி யில் அவர்கட்கிருந்த ஆழமான பற்றையும், மன உறுதியையும் வியக்காமல் இருக்க முடியாது. இந்தக் கொடுமைகட்கு அஞ்சி இத் தமிழர் தம் தொல்பழஞ் சமயமாகிய சைவத்தைக் கைவிட்டிருப்பின் பின்னர் வந்த திருஞானசம்பந்தருக்கு வேலையே இல்லாமல் போயிருக்கும். இக்காலகட்டத்தில் இத் தமிழ் மக்கள் வந்தேறிகள் செய்யும் கொடுமைகளைத் தாங்கிக்கொண்டு தம் சமய வழி பாட்டை விடாமல் போற்றினரே அல்லாமல் களப்பிரரை எதிர்த்துப் போராடியதாகத் தெரியவில்லை. தேவார காலத்துக்கு முந்தைய சிவன் மக்களால் மறைவாகவே வழிபடப் பட்டவனாகவே இருந்தான் என்று நினைய வேண்டியுளது. வேள்விக்குடி அறமுறியின்படி பாண்டியன் கடுங்கோன் களப்பிரரை முறியடித்துப் பாண்டி நாட்டை மீட்டான் என்று மட்டுமே தெரிகிறது. களப்பிரார்கள் விட்டுப் போன சமண சமயம் சில மன்னர்கள் காலத்தில் அமிழ்ந்தும் சில மன்னர்கள் காலத்தில் ஓங்கியும் இருந்திருக்க வேண்டும். எந்த எந்த மன்னர் கள் சமணர் கருத்துக்கு இசையத் தம் சமயக் கொள்கைளை மாற்றிக் கொண்டு சமணராக மாறினரோ அந்த மன்னர்கள் காலத்தில் சைவர்கட்குக் கொடுமை செய்ய அவர்கள் தவறிய தில்லை. களப்பிரரை முறியடித்த கடுங்கோன் பரம்பரையினர் சைவர்களாகவே இருந்தனர் என்று தெரிகிறது. வேள்விக்குடி அறமுறி தந்த நெடுஞ் சடையன் வரை இவர்கள் சைவர்களே. எனவேதான் பல்யாக சாலைமுதுகுடுமிப் பெருவழுதி தானமாகத் தந்த வேள்விக்குடி அவனுக்குப் பிறகு அது களப்பிரர் கைப்பட்டு அவர்கள் வசமாயிற்று. அதே வேள்விக்குடி கடுங்கோனுக்குப் பிறகு ஏழாவது தலைமுறையினனான நெடுஞ்சடையனால் மறு தானம் செய்யப் பெற்றதை அறிகின்றோம். களப்பிரரை