பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 2 பெரியபுராணம் - ஓர் ஆய்வு கலித்தொகையும், அம்மையாரும், இறைவன் ஆடல் பற்றிக் கூறியவை இவ்விருவருள் காரைக்கால் அம்மையார் முன்னவராகலாம் என்று கருத இடமுண்டு. சங்க இலக்கியம் பற்றிப் பேசுகையில் கலித்தொகை அத் தொகுப்புள் பிற்பட்டதென்றும் அதன் கடவுள் வாழ்த்துப் பாடலிலும், நூலினுள் பல பாடல்களிலும் சிவபிரான்பற்றிய குறிப்புகள் வருவதுபற்றிச் சென்ற அதிகாரங் களில் பேசப்பெற்றது. கலித்தொகைக் கடவுள் வாழ்த்துப் பாடலின் தனிச் சிறப்பு சிவபெருமானுடைய பல்வேறு நடனம் பற்றிப் பேசுவதாகும். இப் பாடல் முழுவதும் மறுபடியும் காண வேண்டிய சிறப்புடையது. தரவு ஆறறி அந்தணர்க்கு அருமறை பலபகர்ந்து தேறுநீர் சடைக்கரந்து திரிபுரம் தீமடுத்து கூறாமல் குறித்ததன் மேல் செல்லுங் கடுங்கூளி மாறாப் போர் மணிமிடற்று எண்கையாய் கேளினி; தாழிசை படுபறை பல இயம்பப் பல் உருவம் பெயர்த்து நீ கொடுகொட்டி ஆடுங்கால் கோடுயர் அகலல்குல் கொடிபுரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ? மண்டுஅமர் பல கடந்து மதுகையால் நீறணிந்து பண்டரங்கம் ஆடுங்கால் பணைஎழில் அணை மென்றோள் வண்டு அரற்றுங் கூந்தலாள் வளர்து க்குத் தருவாளோ கொலை உழுவைத் தோல் அசைஇக் கொன்றைத்தார் சுவல்புரள தலை அங்கை கொண்டு நீ காபாலம் ஆடுங்கால் முலை அணிந்த முறுவலாள் முற்பாணி தருவாளோ? - . என ஆங்கு சுரிதகம் பாணியும் தூக்கும் சீரும் என்று இவை மாணிழை அரிவை காப்ப . ஆணம்இல் பொருள் எமக்கு அமர்ந்தனை શળ-” இப்பாடல் சிவபெருமான் ஆறு அங்கங்களையும் அறிந்த முனிவர்க்கு அரிய மறைகள் பலவற்றை உபதேசித்தான் என்றும்