தேவார காலத்துக்கு முந்தைய சிவன் I 1.3 கங்கையைச் சடையில் கரந்தவன் என்றும் திரிபுரம் எரித்தவன் என்றும் தனது இச்சாமாத்திரத்தில் அழிக்கும் தன் சக்தியின் கூறு களைக் கூளிகளாக உடையவன் என்றும் நீலகண்டம் உடையவன் என்றும் தரவு என்னும் பகுதியில் கூறியவாறு காணலாம். ரிக், யஜுர், அதர்வம் என்பவற்றை விட்டு விட்டு தைத்திரியம், பெளடியம், தலவகாரம், சாம வேதம் என நச்சினாக்கினியர் பொருள் கூறுவதை மனம்கொளல் நலம். தொல்காப்பியத்தின் தொடக்கத்தில் உள்ள சிறப்புப்பாயிரத்தில் வரும் அறங்கரை நாவின் நான்மறை முற்றிய' என்ற இடத்திலும் நான்மறை என்ற சொல்லுக்கு இங்குக் கூறிய நான்கையுமே கூறுகிறார். நச்சினார்க் கினியர் வேதம் நன்கு அறிந்தவராயினும் அவர்காலத்து நாம் கூறும் 4 வேதத்திற்குப் பதிலாக இந்த நான்கு பெயர்களுமே வழக்கத்திலிருந்தன போலும்! இனிச் சிவபிரான் ஆடும் மூவகைக் கூத்துப் பேசப்படுகிறது. பலவாகிய வாத்தியங்கள் ஒலிக்கக் கட்புலனாம் பல வடிவங்களை யும் நின்னிடத்தே ஒடுக்கிக் கொண்டு கொடிய கொட்டிக் கூத்தினை ஆடும்போது உமை தாள இறுதியைத் தன்னிடம் கொண்ட சீரைத் தருவாளோ? கொடு கொட்டி சர்வ சங்கார காலத்தில் ஆடும் கொடிய கூத்து. திரிபுரத்தை அழித்து வெந்த நீற்றைப் பூசிக் கொண்டு பாண்டரங்கம் என்ற கூத்தை நீ ஆடும் பொழுது உமையவள் தூக்கைத் தருவாளோ? புலித்தோலை உடுத்துக் கொன்றை மாலை புரள மண்டை ஒட்டை ஏந்திக் காபாலம் என்னும் கூத்தை நீ ஆடும் பொழுது உமை தாளத்தின் முதல் எடுக்கும் காலத்தினைத் தருவாளோ? 'ஒவ்வொரு தாளத்திற்கும் பாணி, தூக்கு, சீர் என மூன்றும் இருப்பினும் ஒவ்வொரு கூத்துக்கும் ஒன்று முக்கியமாதலின் அதனைக் கூறினார்' என்பது நச்சினாக்கினியர் உரை. - இனிச் சுரிதகத்தில் சங்கார காலத்தில் வேறு யாரும் ஒன்றும் இன்மையினாலே பாணி, தூக்கு, சீர் என்பவற்றை உமையொருத் தியே பார்த்துக்கொள்ளவேண்டும். காத்தல் நடைபெறுகின்ற இப்பொழுது அன்பிலாராகிய எமக்கும் ஒரு வடிவை மேற் கொண்டு அருளினால் இதன் காரணம் யாதோ? என்று கேட்கிறார் ஆசிரியர் நல்லந்துவனார்.
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/141
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை