1 I 4 பெரியபுராணம்- ஓர் ஆய்வு இறைவன் ஆடிய மூவகை நடனத்தையுங் கூறி இவை சங்கார காலத்தில் நிகழ்பவை என்றும் கூறிவிட்டார். அடுத்து முடிக்கை யில் இப்பொழுது எம்போன்ற அன்பிலாரும் கண்டு வணங்க ஒரு வடிவு கொண்டது ஏன்?' என்ற வினாவின் மூலமாக நமக்குத் தகுதி இன்றேனும் இறைவன் கருணை வள்ளல் ஆதலால் நம் மனம் சென்று பற்றும் அளவில் ஒரு வடிவு கொண்டு நிற்கின்றான் என்றும் ஆசிரியர் கூறுவது இதுவரை கண்ட இலக்கியங்களில் அறியப்படாத ஒரு புதிய செய்தியாகும். இறைவன் ஆட்டம் பற்றியும் இதுவரை வேறு முன்னூல்களில் கண்டதில்லை. எனவே கலித்தொகைக் கடவுள் வாழ்த்துப் பாடல் தமிழகத் தில் சிவ வழிபாட்டில் அச் சிவனுக்குரியனவாகப் புதிய செய்திகள் இரண்டைக் கூறுதல் சிந்திக்கற்பாலது. முதலாவது; அவன் சங்காரகாலத்தில் ஆடுபவன்; இரண்டாவது: உயிர்கள் மாட்டுக் கொண்ட கருணையால் கட்புலனாம் வடிவு கொண்டு அருள் செய்ய வந்துள்ளான். சிவபெருமானின் ஆட்டம் பற்றிய செய்தி புதியது எனக் கண்டோம். இனி இங்குக் கூறப்பெற்ற நடனங்கள் பற்றிச் சிலம்பு விரிவாகப் பேசுகிறது. 4.
- 峻 8 号 命 够 ● 爆 歌 * * பின்னர்ச் சீரியல் பொலிய, நீரல. நீங்க பாரதி ஆடிய பாரதி-அரங்கத்து, திரிபுரம் எரியத் தேவர் வேண்ட, எரிமுகப் பேரம்பு ஏவல் கேட்ப, உமையவள் ஒரு திறன் ஆக ஓங்கிய
இமையவள் ஆடிய கொடு கொட்டி...... 感盟 பாரதி ஆடிய வியன் பாண்டரங்கமும்: £ 3 பாரதி என்பது பைரவி எனப் பொருள்படும். பாரதி அரங்கம் சுடுகாடு. சென்ற அதிகாரத்தில் இளங்கோ அடிகள் எவ்வாறு உமைக்கு இடந்தந்து வேட்டுவ வரியில் சாக்த மரபு என்று கருதக் கூடிய முறையில் பாடுகின்றார் என்பது பேசப்பெற்றது. ஆனால் முற்றிலும் சாக்தமாக, இறைவியை முழுவதுமாய்ப் போற்றிச் சிவத்தைத் தனிமைப்படுத்தும் சாக்தம் அன்று, அடிகள் கூறும் கருத்துக்கள். அரி, அயன், அரன் இதய கமலத்து வீற்றிருக் கிறாள்' என்று கூறும் ஓர் இடம் தவிரப் பிற எல்லாம் உன்ம ஒருபாகனாகிய இயல்பையே விரித்துக் கூறுவதாக உள்ளது.