II 6 பெரியபுராணம் - ஓர் ஆய்வு இவர்கள் காலத்தில் தோன்றிய காரைக்கால் அம்மையார் சிவபெருமானைப் பற்றிக் கூறியவை சிவபெருமானைப் பிறவா யாக்கைப் பெரியோன் என்று இச் சமண முனிவர் போற்றினாலும் இறைவனுடைய அம்மையப்பர் கோலத்தில் மிகுதியும் ஈடுபாடு கொண்டவர் போலத் தெரி கின்றது. எனவே கலித்தொகைக் கடவுள் வாழ்த்திலும், சிலம்பின் சில பகுதிகளிலும் சிவபிரான் நடனமும் அம்மையப்பர் கோலமும் பெரிதும் போற்றப் பெற்றன என்ற அறிய முடிகிறது. இனி இக் காலத்தை அடுத்துத் தோன்றி, இன்றும் உயிருடன் இருக்கும் தமிழ் இலக்கியம் காரைக்கால் அம்மையின் மூத்த திருப்பதிகங்கள், இரட்டை மணி மாலை, அற்புதத் திருவந்தாதி என்பனவையேயாம். இவற்றுள் மூத்த திருப்பதிகங்கள் 22 பாடல்கள், திருவிரட்டை மணிமாலையில் 20 பாடல்கள், அற்புதத் திருவந்தாதியில் 10 1 பாடல்கள் உள்ளன. அம்மையார் பாடிய மொத்தப் பாடல்கள் 143 ஆகும். இவற்றுள் மூத்த திருப்பதி கங்களில் 20, திருவிரட்டை மணிமாலையில் 15வது பாடல், திருவந்தாதியில், 25, 30, 51, 70, 77, 78, 98, 99 ஆகிய பாடல் கள் என மொத்தம் 29 பாடல்களில் இறைவன் திருநடம் பற்றிப் பேசப்படுகிறது. காரைக்கால் அம்மை சைவசமயத்துக்குத் தந்த புதிய கருத்துக்கள் கலித்தொகைக்குப் பிறகு கி.பி. 2ஆம் நூற்றாண்டு வாக்கில் சிலம்பும், கி.பி. 5ஆம் நூற்றாண்டு வாக்கில் காரைக்கால் அம்மை பாடல்களும் சிவபெருமான் ஆடிய நடனம் பற்றி மிகுதியாகப் பேசுகின்றன. இப்பாடல்கள் அனைத்தும் பொதுவாகச் சிவபிரான் ஆடிய கூத்தைப் பாடுகின்றனவே தவிர தனிப்பட்ட ஒர் ஊரின் திருக்கோயிலில் உள்ள வடிவத்தைப் பாடவில்லை என்பதையும் அறிகிறோம். வேறு வகையாகக் கூறவேண்டு மெனில் கி.பி. 5ஆம் நூற்றாண்டுவரைச் சிவபெருமானுடைய, ஆடல் வடிவம் அம்மையப்ப வடிவம் என்பவையே பெரிதும் போற்றப்பட்டன. இந்த எல்லை வரை உள்ள பாடல்களில் சிவன் என்ற பெயரோ லிங்கம் என்ற அடையாளப் பெயரோ இடம் பெற இல்லை. ஆனால் திரிபுரம் எரிந்தது, நஞ்சுண்டு கறுத்தது போன்ற செயல்கள் அடிக்கடி இடம் பெறுகின்றன. வடிவுகடந்த பொருள்கள் என்பதனையும் முழு முதற் பொருள் என்பதனையும் இக் கால கட்டம் வரையுள்ள தமிழர் நன்குணந்திருந்தனராயினும் அப் பெருமானுக்க ஒரு வடிவு கொடுத்தே பாடினர். -
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/144
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை