பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார காலத்துக்கு முந்தைய சிவன் 1 1 7 'அன்றும் திருவுருவம் காணாதே ஆட்பட்டேன் இன்றும் திருவுருவம் கண்டிலேன்-என்றுந்தான் எவ்வுருவோ நும்பிரான் என்பார்கட்கு என் உரைக்கேன் எவ்வுருவோ நின் உருவம் ஏது' " என்பது அம்மையார் பாடல். கலித்தொகை, சிலம்பு ஆகியவற்றில் காணப்படாத வளர்ச்சி பலவற்றையும் அம்மையார் பாடலில் காண முடிகிறது. 'தனக்கே அடியனாய்த் தன் அடைந்து வாழும் எனக்கே அருளாவாறு என் கொல்' 'வெள்ள நீ ரேற்றான் அடிக்கமலம் நீ விரும்பி உள்ளமே எப்போதும் ஒது...... • 30 'என்பறாக் கோலத்து எரியாடும் எம்மானார்க்கு அன்பறாது என்நெஞ்சு அவர்க்கு....... 3 !י ? 'என் நெஞ்சத்தான் என்பன் யான் ’ 'வினைக்கடலை யாக்குவிக்கும் மீளாப் பிறவிக் கனைக்கடலை நீந்தினோம் காண்...... * 33 'என்பாக்கை யாலிகழாது ஏத்துவரேல் இவ்வுலகில் என்பு யாக்கை யாய்ப் பிறவார் ஈண்டு....... < 34 ‘எங்குற்றான் என்பீர்கள் என்போல்வார் சிந்தையினும் இங்குற்றான் காண்பார்க்கு எளிது...... as . ‘இனி அவலம் உண்டோ எமக்கு........ ' 'காலனையும் வென்றோம் கடுநரகம் கைகழன்றோம் மேலை இருவினையை வேரறுத்தோம்-கோல அரனார் அவிந்தழிய வெந்தீ அம்பு எய்தான் சரணார விந்தங்கள் சார்ந்து........ z 3 7 இங்குக்காட்டியுள்ள பகுதிகள் தமிழரது சிவ வழிபாட்டில் ஏற்பட்ட வளர்ச்சி முன்னேற்றங்களாகும். இறைவனிடம் அன்பு பூண்டு அவனுக்கு அடியனாகவும், அடிமையாகவும் வாழ முற்பட வேண்டும். இறைவனை ஏத்தினால் பிறவி நீங்கும். இறைவன் நினைபவர் நெஞ்சுளே உறைகின்றான். அவனை அன்பு செய்யத்தொடங்கினால்அவலம் இல்லை. அவனிடம் அன்பு செய்தால் இருவினை கழலும் என்ற இந்தக் கருத்துக்கள் தமிழர் தம் சிவ வழிபாட்டு வரலாற்றில் இக்கால கட்டத்தில் காணப்பெறும் புது வளர்ச்சியாகும். அம்மைக்கு முற்பட்ட நூல்களுள் திருக்குறள், திருமுருகாற்றுப்படை, பரிபாடல் பாடல் களில் இவற்றுள் ஒன்றிரண்டு கருத்துக்களைக் காணலாம்.