10 தேவார காலத்துக்கு முந்தைய சிவன் I 1 9 கொண்டு விடுகிறது என்பதைக் காணமுடியும். எந்த ஒன்றும் ஒரு தாய் வயிற்றில்தான் பிறக்க வேண்டும் என்பதை நாம் அறிவோம். முழுத் தன்மை பெற்ற சைவம் என்ற ஒன்று, சிவ வழிபாடு என்ற ஒன்று காரைக்கால் அம்மையாராகிய தாய் வயிற்றில் பிறந்ததாகும் என்பதை அறிதல் நலம். இவ்வுண்மை யைப் பிறர் அறிந்தனரோ இல்லையோ சேக்கிழார் பெருமான் நன்றாக அறிந்திருந்தார். ஆகவே தான் மூல முதற் பொருளாகிய இறைவனையே அம்மையாரைத் தன்தாய் என்று கூறுமாறு அவர் வரலாற்றை அமைக்கின்றார். இவ்வுலகில் இருந்த படியே பேய் வடிவு வேண்டிப் பெற்று ‘பேயாய் நற்கணத்தில் ஒன்றாய நாம் ' என்று பாடும் அளவிற்கு வளர்ந்துவிட்டவர், பின்னே வரப்போகும் மூவர் முதலிகள் பாட இருக்கும் பதிகங்கட்கு முன்னோடியாகப் பாடிக் காட்டிய பெருமையுடையவர் அம்மையார் என்பதை நன்கறிந்து கொண்ட சேக்கிழார், அம்மையார் பாடியருளிய பதிகங்களை மூத்த நல்பதிகம் ' என்று பெயர் சூட்டுகிறார். திருஞான சம்பந்தர் பாடியன முதல் மூன்று திருமுறைகள் என வகுக்கப்பெற்று விட்டன. எனவே சேக்கிழார் அதை ஒன்றுஞ் செய்ய முடியவில்லை. ஆனால் அந்த ஞான சம்பந்தரும்'அம்மை திருத்தலையாலே நடந்து போற்றும் அம்மையப்பர் திரு ஆலங்காட்டில் காலால் நடந்து உள்ளே செல்ல மாட்டேன்' என்று கூறும் சிறப்புப் பெற்ற அம்மையார் பாடல்களை, ஞான சம்பந்தருக்கும் வழிகாட்டிய பாடல்களை எங்கே எப்படி வைப்பது? இந்தப் பிரச்சனைக்கு முடிவு கூற முடியாத சேக்கிழார் அப்பதிகங்கட்கு மூத்த திருப்பதிகங்கள் எனப் பெயர் சூட்டுகிறார். ஆம்!தமிழர்களுடைய தொல் பழஞ் சமயமாகிய சைவம் எவ்வாறு எவ்வழியில் செல்லவேண்டும் என்பதற்குக் கோடிட்டுக் காட்டியவர் அம்மையார். மூவர் தேவாரங்கள் இவர் வழியைப் பின்பற்றிச் சென்றனவே தவிரப் புது வழி ஒன்றையும் வகுக்க விவ்லை எனவே அவர்கள்பாடிய பதிகங்கட்கு இரு நூற்றாண்டுகள் முன்னர்த்ததோன்றிய பாடல் கட்கு மூத்த திருப்பதிகங்கள் எனப்பெயரிட்டது சரியே! இறைவனிடம் முழு அன்பு செலுத்துதல், தன்னை முழுவது மாக அவனிடம் அர்ப்பணித்தல், இரு வினையைப் போக்க முயலுதல், பிறப்பை அறுக்க முயலுதல், இறைவன் தன் உள்ளத் திலேயே உறைவதை உணர்தல், இவற்றால் அவலம் நீங்குதல் என்பவை அம்மையார் சைவ சமய வளர்ச்சிக்குத் தந்த கொடை களாம். இவருக்கு முன் இக் கருத்துக்களை இவ்வளவு அழுத்த மாகக் கூறும் நூல்களைக் கண்டதில்லை. மேலும் தமிழகத்தில் அவருடைய நாளில் புகுந்து நிலை பெறுவதற்குப் போட்டியிட்ட
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/147
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை