I 20 பெரியபுராணம்- ஓர் ஆய்வு சமயங்கள் பலவாகும். வைதிக சமயம் என்று கூறப்பெறும் வேத வழக்கொடுபட்ட சமயமும் மெள்ள மெள்ளச் சிவபிரானை ஏற்றுக்கொண்டு, ஆனால் தான் கூறும் வேள்வி முதலியவற்றை யும் விடாமல் செய்யவேண்டும் என்ற கூறிக்கொண்டு தமிழ் நாட்டில் கால்கொள்ளத் தொடங்கிற்று. இச் சமயம் சிவ பெருமானை ஏற்றுக்கொண்டதால் இங்குள்ள தொல் பழஞ் சமயமாகிய சைவத்துடன் இணைய அதிகத் தொல்லை ஏற்பட வில்லை. ஆனால் தமிழ் மொழியில் அல்லாத வடமொழியில் வேதங்கள் இருப்பது ஒரளவு இடையூறாக இருந்திருத்தல் வேண்டும். இச் சமய முறைகளைப் பின்பற்றுபவர்கள்கூட வேள்வி முதலியவற்றைச் செய்வதற்கு வேதியர்களின் உதவியை நாட வேண்டிய சூழ்நிலை இருந்துவந்தது. காரைக்கால் அம்மை காலத்திலும் இந்த வேத வழக்கொடு பட்ட சமயம் வலுவாகத் தமிழகத்தில் கால் கொண்டிருக்க வேண்டும். அப்பெருமாட்டியார் தாம் பாடிய 143 பாடல்களில் ஒரு பாடலில் மட்டும் இதனைக் குறிப்பிட்டுக் கூறுகிறார். 'வேதியனை வேதப் பொருளானை வேதத்துக்கு ஆதியனை ஆதிரைநன் னாளானைச்சோதிப்பான் வல்ஏன மாய்ப்புக்கு மாலவனும் மாட்டாது கில்லேன அமா என்றான் கீழ் " என்ற இப்பாடலில் சிவபெருமானை வேதம், வேதப்பொருள், வேதத்திற்கும் மூலமானவன் என்று பேசுகிறார். அம்மையார் களப்பிரர் பற்றி ஒன்றும் கூறாதது ஏன்? இவ்வாறு அம்மையார் பாடுவதால் சங்க காலத்தில் காணப் பெறும் வேதம், வேள்வி என்பன அம்மையார் காலத்திலும் நின்று நிலைத்து விட்டன என்பதை அறிகிறோம். ஆனாலும் அதிலும் ஒர் வளர்ச்சி ஏற்பட்டிருப்பதையும் அறிதல் நலம். சங்க காலத்தில் வேதம் முதலியனவும், ஆலமர் செல்வனாகிய சிவபிரானும் பேசப்படினும் இரண்டையும் சேர்க்கும் நேரத்தில் சிவபிரான் வேதத்தை எப்பொழுதும் ஒதிக்கொண்டே இருப்பான்' என்று தான் கூறினார்கள். 'முது முதல்வன்' என்று கூறும் வகையால் அப்புறப்பாடல் சிவனது முதன்மையை ஏற்றுக் கொண்டாலும் அவன் பாடுவதாகவே வேதத்தைக் கூறிற்று. ஆனால் அம்மையார் வேதப்பொருளாக உள்ளவன்' என்றும் வேதத்துக்கும் முற்பட்டவன்(மூலமானவன்)' என்றும் கூறுவது கி.பி.5ஆம் நூற்றாண்டு வாக்கில் ஏற்பட்ட வளர்ச்சியையே தெரிவிக்கின்றது. .
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/148
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை