பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார காலத்துக்கு முந்தைய சிவன் 1 2 I இவற்றை எல்லாம் கூறிய அம்மையார் சமணம் பெளத்தம் என்பவைப்பற்றி ஒரு வார்த்தை கூடக் கூறவில்லை என்பதையும் காண்டல் வேண்டும். நாட்டு நடப்பு தெரியாமல் வீட்டிற் குள்ளேயே இருந்தவரும் அல்லர் இவர். மாபெரும் தத்துவங்களை யெல்லாம் தம் பாடல்களில் அனாயாசமாகப் பெய்து பாடும் இவர் நாட்டு நடப்பை அறியாதவர் என்று நினைப்பதும் பிழையாம். அப்படியானால் களப்பிரர் காலமான அவருடைய காலத்தில் ஏன் அம்மையார் அவர்கள்பற்றி ஒன்றுங் கூறவில்லை? இந்த வினா ஆழந்து சிந்திக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஆறாம் நூற்றாண்டில் பாண்டியன் கடுங்கோனால் பாண்டி நாட்டை விட்டுத் துரத்தப்படப் போகும் நிலையில் களப்பிரர் இருந்திருத்தல் வேண்டும். மேலும் தமிழர்களுடைய சமயம் முதலியவற்றில் தலையிடுவது தம் நிலைபேற்றுகே இடையூறாக முடியலாம் என்பதையும் அவர்கள் அறிந்து மெள்ள அச் செயலில் ஈடுபடுதலைத் தவிர்த்திருக்க வேண்டும். அம்மையார் காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர். அது சோழ நாட்டுடன் இணைந்த பகுதியாகும். முன்னர்க் கண்ட முறையில் சோணாட்டுப் பகுதியில் புகுந்த களப்பிரர் பெளத்த சமயத்தைச் சார்ந்தவர்கள் என்று கண்டோம். இவர்கள் மதமாற்றம் முதலியவற்றில் சமணர் போல ஈடுபாடு கொண்டதாகத் தெரிய வில்லை. எனவே, அம்மையார் வாழ்ந்த பகுதி பெளத்தப் பகுதியாகலின் சமணக் களப்பிரர் புகுந்த இடங்களில் விளைந்த தொல்லை, அங்கு விளைந்திருக்க முடியாது. எனவே அதன் கொடுமையை அம்மையார் நினைக்கவோ பாடவோ இல்லை என்று கொள்வது நேரிதாகும். - தமிழகத்தின் தொல் பழஞ் சமயமாகிய சைவத்தின் வளர்ச்சி யில், சங்க காலத்துக்கு முற்பட்ட பழங்குடியினர் வழிபட்ட நிலை ஒரு கட்டம். அடுத்துச் சங்கப் பாடல்களில் காணப்பெறும் வழிபாட்டு நிலை இரண்டாவது கட்டம். பின்னர் அப் பாடல் களின் கடவுள் வாழ்த்துப்பாடல்கள், சிலம்பு என்பவற்றில் காணப்பெறும் வழிபாட்டு நிலை மூன்றாவது கட்டம். இதனை யும் கடந்து காரைக்கால் அம்மையார் காலம் வரை இருந்த வழிபாட்டு நிலை நான்காவது கட்டமாகும். தொல் பழங்குடி யினர் வழிபட்ட நிலை, வேதக் கலப்பு இல்லாமல் சிவன் சிவனாகவே வழிப்பட்ட நிலை, சங்க காலத்துக்கு முற்பட்டு வடநாட்டின் வடமேற்குப் பகுதியில் தோன்றி வளர்ந்த வேத வழக்கிலும் தமிழர் சிவ வழிபாடு புகுந்து அவர்களாலும்