I 3 0 பெரியபுராணம் - ஒர் ஆய்வு இடங்களில் ஆயிரக்கணக்கான சமணர் தங்கி வாழ்ந்ததாலும், நெடுமாறன் ப்ோன்ற பேரரசனே இவர்கள் பக்கம் இருந்ததாலும் சிவன் கோயில்கள் அருகிவிட்டன. அடுத்துத் தொண்டை நாட்டிலும் அவர்கள் செல்வாக்கு மிக்கிருந்தமையின் அங்கும் சிவன் கோயில்கள் அருகிவிட்டன. காஞ்சியில் மட்டும் நூற்றுக்கணக்கான கோயில்கள் இருப்பவும் தொண்டை நாடு முழுவதிலும் 32 கோயில்களே உள்ளன. என்றால் அதன் காரணம் இப்பகுதியும் சமணர்கள் செல்வாக்கில் இருந்ததேயாம். இவற்றின் எதிராக சோழ நாட்டில் சமணர் கள் ஆதிக்கம் அதிகம் இல்லை. மேலும் பல்லவர், பாண்டியர் என்பவர்கள் வலுக்கத் தொடங்கிய காலத்தில் சோழ நாட்டில் பெரு மன்னர் என்பார் யாரும் இல்லை. ஆதலால் அரசனைத் தம் வயப்படுத்தி மக்களை ஈர்க்க வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது போலும்! எனவேதான் அங்கு இத்தனை அதிகமான சிவன் கோயில்கள் இருந்தன என்று கருத இடமுண்டாகிறது. பல்லவர் காலத்தில் தமிழ்மொழியின் நிலை இனி இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் வளர்ந்த மொழி பற்றியும் சிறிது காண்டல் வேண்டும். பல்லவர்கள் தமிழ் மொழி பால் வெறுப்புக் கொள்ளவில்லை. எனினும், அவர்களுடைய கல்வெட்டுக்கள் தொடக்க காலத்தில் வடமொழியிலேயே உள்ளன எனக் காண்கிறோம். மேலும் தண்டி போன்ற பெரும் வடமொழிப் புலவர்கள் பல்லவர்கள் காலத்து இருந்தவர்களே ஆவர். முதலாம் மகேந்திரவர்மன் சிறந்த வடமொழி வல்லுநன். மத்தவிலாசப் பிரகசனம் என்ற நாடக நூலை வடமொழியில் எழுதினவனாவான். பல்லவர் வடமொழியை எந்த அளவுக்கு ஆதரித்தனரோ அதைவிட அதிகமாக வேத விற்பன்னர்களைப் போற்றிச் சிறப்புக்கள் செய்தனர். வேத விற்பன்னர்கள் என்று கூறியவுடன் தமிழ் நாட்டில் தோன்றிய தமிழ் வேதிகர்கள், வேதம் வல்லவர் களாயிருப்பின் அவர்கட்கு வரிசை வழங்கினரோ என்று நினைய வேண்டா. பல்லவர்களே வடக்கே இருந்து வந்தவர்களாகலின் இவர்களின் பின்னர் இவர்களைத் தொடர்ந்து வந்த வடநாட்டு வேத விற்பன்னர்களே இவர்கள் அன்புக்கும் வரிசைக்கும் உரியராயினர் என்று தெரிகிறது. பல்லவர் வடமொழியை மட்டுமே வளர்த்தமை இரண்டாம் நந்திவர்மன் வழங்கிய காசாக்குடிச் செப்பேடு ஜேஷ்டபாத ஸோமாயாஜிக்குப் பெருங் கொடை தந்துள்தைக்
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/158
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை