பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூவர் காலப் பின்னணி I 3 1 குறிக்கின்றது. ஸோமாயாஜிக்கு அச் செப்பேடு தரும் புகழ்மாலை அதனைப் படிப்பவரை வியப்பில் ஆழ்த்தும். ஸ்ருதி, ஸ்மிருதி இவற்றில் வல்லவன்; புராண இதிகாசங்களில் வல்லவன்; எல்லாம்வல்லவன்; எல்லாக் கிரியைகளையும் செய்யவல்லவன்; வாஜபேயம் முதலிய யாகங்களைச் செய்வதன், என்று கூறுகிறது. தண்டன் தோட்டச் செப்பேடுகளின்படி பல்லவர் அவையில் எப்பொழுதும் வடமொழிப் புலவர் நிறைந்திருந்தனர். இந்தச் செப்பேடுகளை எழுதியவர்கள்கூடச் சிறந்த வடமொழிப் புலவர்களாய் இருந்தனர். இவ்வாறு வடமொழி வல்லாரைப் போற்றியும் கல்லூரிகள் பல வைத்தும் வடமொழிப் புலமையை நாட்டில் பெருக்கினர். இக்கல்லூரிகள் கடிகைகள் என வழங்கப் பட்டன. ஆனால் வடமொழி பயிற்றும் கடிகைகள், பல்லவர் காலத்துக்கு முன்பே கூட இருந்து வந்தன என ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். காஞ்சியில் பிரசித்தி பெற்ற கடிகை ஒன்று இருந்ததென்றும் கடம்பர்கள் வேந்தனான மயூரசன்மன் இக் கடிகையில் கல்வி பயின்றவன் எனவும் தெரிகிறது. பழமையான இந்தக் காஞ்சிக் கடிகையை காசாக்குடி, வேளூர்ப்பாளையச் செப்பேடுகளும் குறிக்கின்றன. காஞ்சிக் கடிகை சாதாரணக் கல்லூரியாக இராமல் மிகு உயர் கல்வி (Postgraduate Course) போதிக்கும் இடமாக அமைந் திருந்தது. மகேந்திரவர்மன், இராச சிம்மன் முதலியோரும் இக் கடிகையைப் பெரிதும் போற்றி வளர்த்தனர் என அறிகிறோம். நாளாவட்டத்தில் இக் கடிகை பல்லவ மன்னர் களுடன் பெரிதும் தொடர்பு கொண்டிருந்தமையின் அரசியலிலும் பங்கு கொள்ளத் தொடங்கியது. தண்டன் தோட்டச் செப்பேடு கூறும் கதை சோளிங்கபுரத்தில் வைணவப் பிராமணர் பயிலும் கடிகை ஒன்றிருந்ததாக டாக்டர் மீனாட்சி கூறுகிறார். இக் கடிகையில் Ls புரிபவர்களே அல்லாமல் தனிபட்டவர் வடமொழி கற்பித்தால் அவர்கட்குப் பிரமதாயம் என்ற இறையிலி நிலங்கள் வழங்கப்பெற்றன. இத்துடன் இல்லாமல் வடமொழி வல்ல பிராமணர்களை வடபுலத்திலிருந்து கூட்டமாக வரவழைத்து நிலமும் வீடும் இறையிலியாகத் தந்து அக்ரகாரங்களை ஏற்படுத்தி அதில் அவர்களைத் தங்கி வாழுமாறு செய்தனர். ஸ்தானு குண்டா என்ற இடத்தில் முப்பத்திரண்டு வேதியர் குடும்பங்கள் இவ்வாறு குடியேற்றப்பெற்றன. கும்பகோணத்தின்