I 34 பெரியபுராணம்- ஓர் ஆய்வு இவ்வேதியர்கள் சிவ வழிபாட்டையும் திருவைந்தெழுத்தையும் போற்றுபவர்கள் மேலும் ஒர் ஊகம் செய்யும் துணிவு பிறக்கிறது. தமிழ் நாடு தொல் பழஞ் சமயமாகிய சிவ வழிபாட்டில் ஈடுபாடு கொண்டதாகலின் இங்குள்ள அந்தணர்களும் பழைய வேதகால தெய்வங்களை முன்னிருத்தி வேள்விகள் செய்யாமல் சிவபரம் பொருளை முன்னிருத்தி வேள்விகள் செய்பவர்களாக நாளா வட்டத்தில் மாறி இருக்கக் கூடும். வேத வழக்கொடுப்பட்டவர்கள் கூட இங்கு வந்து சில காலம் கழித்த பிறகு, பூரீருத்ரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துச் சிவ வேள்வி செய்கின்றவர் களாக ஆகியிருந்தால் வந்தேறிகளாகிய பல்லவர்கள் இவர்களை நம்புவதோ அன்றி இவர்களைக் கொண்டு தங்கள் வேள்விகளைச் செய்வதோ இயலாத காரியம். இக் காரணத்தால் வெளியிலிருந்து வேதியர்களை இறக்குமதி செய்தார்களோ? என்று ஊகிப்பதிலும் தவறு இல்லை என்றே தோன்றுகிறது. இங்குள்ள எல்லா வேதியர்களும் சிவ வேள்வியில் ஈடுப்பட்டிருந்தனர் என்றுங் கூற முடியாது. பழமையை விடாமல்பற்றி நிற்பவர்கள் பலராகவும், புது முறையில் சிவ வேள்வியில் ஈடுபட்டவர்கள் சிலராகவும் இருந் திருக்க வேண்டும். என்றாலும் வெளியிலிருந்து வந்த பல்லவர் கள் இங்குள்ள இந்த நுணுக்கமான வேறு பாட்டை அறிந்திருக்க நியாயம் இல்லை. மேலும் இக்காலகட்டம் ஆதி சங்கரருக்கும் முற்பட்டகாலம் என்பதையும் மனங் கொள்ள வேண்டும். அத்வைதம் என்ற பெயரில் விக்ரக வழிப்பாட்டை இரண்டாம் பட்சமாகக் கொள்ளும் கொள்கையாளர் இன்னும் தோன்ற வில்லை. எனவே தமிழகத் திலிருந்த வேதியர்கள் திருக்கோயில் வழிபாட்டில் ஈடுபட்டவர் களாகவும் இருந்திருக்க வேண்டும். அக்காலக் கோயில்களில் குறிப்பிட்ட ஓர் இனத்தார்தான் தெய்வப் படிமங்களைத் தொட்டு வழிபட வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்ததாகத் தெரியவில்லை. "செந்தமிழர், தெய்வமறை நாவர், செழுநற்கலை - தெரிந்தவரோடு அந்தமில் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அரனூர் கொந்தலர் பொழிற்பழன வேலிகுளிர் தண்புனல் வளம்
- .. பெருகவே வெந்தழல் விளங்கி வளர் வேதியர் விரும்புபதி விழி நகரே'