மூவர் காலப் பின்னணி I 3 7 தம் சேக்கிழார் என்ற நூலில். ' எனவே அந்த அப்பாவிக் கதையை விட்டுவிட்டுச் சிந்திப்பது நலம் பயக்கும். 4286 பாடல்களை உடைய பெரிய புராணம் 63 தனி அடியார்கள் பற்றியும் 9 தொகையடியார்கள் பற்றியும் கூறும். இதில் திருஞானசம்பந்தர் 63 அடியார்களில் ஒருவர். என்றாலும் அவர் ஒருவருக்கு மட்டும் 1256 பாடல்கள் பாடப்பட்டுள்ளன. ஏதோ ஒரு காரணம் பற்றியே அச் சிறிய பெருந்தகையாருக்கு மூன்றில் ஒரு பங்கு வழங்குகிறார் சேக்கிழார். அதற்குக் காரணம் யாது? இந்த ஒரு பெருமகனாரல்தான் தமிழ்ப் பண்பாடு நாகரிகம் என்பவை நிலைத்துள்ளன என்று நினைக்கிறார் அமைச்சராக இருந்த சேக்கிழார். எனவே அவருக்கு எவ்வளவு நன்றி கூறின்ாலும் போதாது என்று கருதினதால், தாம் பாட எடுத்துக் கொண்ட நூலில் மூன்றில் ஒரு பங்கை ஒரு பெரியாருக்கு வழங்குகிறார். அப்படியானால் ᎧyᏜF❍ ! சமயத்தில் உள்ளவர்கள் 12 ஆம் திருமுறையாக வைத்து வழிபட்டு வீடுபேறு அடைவதற்காகச் சேக்கிழார் தம் நூலை ஆக்கவில்லையா? உறுதியாக இல்லை என்று கூறிவிடலாம். பெரியபுராணம் இல்லா விடினும் தேவார திருவாசகங்கள் மட்டுமே வீடு பேற்றுக்கு வழிகாட்டும். அப்படியானால் சேக்கிழார் ஏன் இதனைப் பாட எடுத்துக் கொண்டார்? - சேக்கிழார் இந்த நுணுக்கத்தை அறிந்தே இருந்தார் திருஞானசம்பந்தரை நாம் நினைப்பது போல் சைவ சமயத் தைப் பரப்புவதற்கும் அதன் பெருமையை வெளிப்படுத்தவும் அவதரித்த பெரியாராகச் சேக்கிழார் கருதினதாகத் தெரிய வில்லை. களப்பிரருக்குப் பின்னும் வீழ்ச்சியடைந்த தமிழ் மொழி யும் தமிழ் நாகரிகமும் எழுந்திராமல் இருப்பதைக் கண்டு இத் தமிழச்சாதியைத் தட்டி எழுப்பவும், இதற்குப் பகையாய் இருப்ப வர்களிடம் போரிடவும் தோன்றிய புரட்சி வீரராய்க் காண்கிறார் சேக்கிழார். ஏழாம் நூற்றாண்டில் இப் போரட்டத்தை நடத்திப் பிள்ளையார் வெற்றி கொண்டிராவிடில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் சைவம் என்பதும் தமிழ் என்பதும் பொய்யாய்க் கணவாய்ப் போயிருக்கும் என்பதைச் சேக்கிழார் நன்றாக அறிந்தார். தமிழ் இனம் முழுவதும் யாராவது ஒருவருக்குக் கடமைப் பட்டிருக்கிறது என்றால் அந்த ஒருவர் ஞானசம்பந்தப் பிள்ளை யாரே என்பதை உணர்ந்த சேக்கிழார் 63 + 9 பேரைப் பாட வேண்டிய கடப்பாடுடைய தம் நூலில் ஒருவருக்கு மட்டும் மூன்றில் ஒரு பங்கு வழங்கித் தம் நன்றியைத் தெரிவித்துக்
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/165
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை