பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூவர் காலப் பின்னணி I 33 தமிழால் வழிபடுதலை எதிர்த்தனர் பல்லவர்க்கு முன்னர்க்கூட வேதியர் என்ற காரணத்தாலும் வேதம் அறிந்தவர்கள் என்ற காரணத்தாலும் பஞ்சாட்சரத்தை ஏற்றுக் கொள்ளாத வைதிக நெறிப்பட்ட வேதியர்கள் தொழில் முறையில் கோயில் பூசை செய்யும் தொழிலை மேற்கொண்டிருந் தனர். தமிழ்நாட்டில் திருச்செந்தூர் முதலிய கோயில்களில் இன்றும் பஞ்சாட்சரத்தின் தலைமைத் தன்மையை ஏற்காத ஸ்மார்த்த பிராமணர்கள் பூசகர்களாக இருப்பதைக் காண் கிறோம். இது கண்டு பொறாத திருமூலர், ‘பேர் கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால் போர் கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம் பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமும் ஆம் என்றே சீர் கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே ' என்று எச்சரிக்கை செய்கிறார். பல்லவர்கள் காலத்திலும், இடைக்காலச் சோழர் காலத் திலும் இந்நாட்டைச் சேர்ந்த சிவ வேதியர்களை விட்டுவிட்டு வடக்கே இருந்து வந்த வைதிகர்களைக் கோயில் பூசைக்கு நியமித்தனர் என்று தெரிகிறது. மேலும் வந்து குடியேறிய வேதியர்கள் தாங்கள் நிலைபெற வேண்டும் என்ற காரணத் தாலும், அரசச் செல்வாக்கு இருந்த காரணத்தாலும், தமிழக மக்களின் பழக்க வழக்கங்களை ஒதுக்க முயன்ற பல்லவ அரசர் கட்குத் தூண்டுகோலாக அமைந்தனர். உள்ளுரில் இருப்பவர் களைவிட வெளியே இருந்து வருபவர்களிடம் அதிக மதிப்பும் மரியாதையும் காட்டும் பழக்கம் இடைக்காலச் சோழர்களிடமும் இருந்தது என்பதனை இராசராசன், இராசேந்திரன் என்பவர் களுடைய கல்வெட்டுக்களிலிருந்தே அறியலாம். மூவர் முதலிகள் பிறந்த இத் தமிழ் நாட்டில் குருமார்கள் கிடைக்காமல் இந்தச் சோழ மன்னர் இருவரும் வடநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப் பெற்ற சதுரானன பண்டிதர், லகுவீச பண்டிதர் என்பவர் களையே குருமார்களாகக் கொண்டிருந்தனர். பல்லவர்கள் வடவர் என்ற காரணத்தால் இம்முறையைக் கையாண்டதில் வியப்பில்லை. இதன் பயனாகத் தமிழகத்தில் இருந்த வேதியர் களுக்கும் வந்து குடியேறிய வேதியர்கட்கும் இடையே ஒரு பகைமை உணர்ச்சி தோன்றி இருக்க வேண்டும். வந்தவர்கள் தாங்களே வேத வழி நிற்பவர்கள் என்று பறை சாற்றும் நிலை ஏற்பட்டிருக்க வேண்டும். இதன் எதிராக இங்குள்ள வேதியர்களும் வேதத்தை அறிவதிலோ வேள்விகள்