மூவர் காலப் பின்னணி 141 'தமிழின்நீர்மை பேசித் தாளம், வீணை பண்ணி நல்ல, முழவம் மொந்தை மல்குபாடல் செய்கை இடம் ஒவார். ' என்று பாடி அந்த வினாவுக்கு விடை நல்குகிறார். திருஞானசம்பந்தர் தம்மைக் கூறிக்கொள்ள வேண்டிய ஒவ்வொரு பதிகத்தின் திருக்கடைக்காப்பிலும் தமிழோடு சேர்த் தியே கூறிக் கொள்வதன் நோக்கம் யாதாக இருக்கும்? 'நற்றமிழ்க்கு இன்துணை ஞான சம்பந்தன்' ' 'தலைமகனாகி நின்ற தமிழ் ஞான சம்பந்தன்' 'தமிழ் விரகினன்' " ‘செந்தமிழ் பரப்புறு திருப்புகலிதன் மேல் 19 பந்தன் உரை செந்தமிழ்கள் 'கழுமலத் திறை தமிழ்க் கிழமைஞானன்' "ஞான சம்பந்தன் தமிழ் மாலை " 'பழுதில் இறை எழுது மொழி தமிழ் விரகன் ' ‘........ காழி நற்றமிழ் ஞானசம்பந்தன் தகைமலி தண்டமிழ்......... * 25 'ஞானத் துயர்கின்ற நலங்கொள் சம்பந்தன் 'தன்னொளி மிக்குயர்ந்த தமிழ் ஞான சம்பந்தன்' I 22 s 27 என்பவை பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாகும். இவ்வாறு நூற்றுக்கணக்கான திருக்கடைக் காப்புப் பாடல்களில் தம்மைத் தமிழுடன் தொடர்பு படுத்திக் கூற வேண்டிய தேவை யாதாக இருக்கும்? இனிச் சில பாடல்களில் தாம் வேதம் அறிந்தவர், ஆனால் தமிழால் பாட வந்தவர் என்றுங் கூற வருவது வியப்பேயாகும். 'நல்லுயர் நான்மறை நாவன் நற்றமிழ் ஞானசம்பந்தன்' ' 'தழங்கு எரி மூன்று ஒம்புதொழில் தமிழ் ஞான சம்பந்தன்' 'நான் மறை நாவன் நற்றமிழ்க்கு இன்துணை ஞான சம்பந்தன் 'செழுமறைகள் பழகுநாவன் 9
- 30
இவ்வாறு தாம் வேதம் ஒதும் அந்தணர் என்றும் தமிழ் பாடும் அந்தணர் என்றும் சேர்த்துக் கூறும் பாடல்களும் பலவுள. தம்மையே மறை நாவன் என்றும் தமிழின் இன்துணை என்றும் கூறுதலின் இவை இரண்டிலும் (வேதம்-தமிழ்) வேறுபாடு