0 15 தமிழ்மொழியின் நிலை-130; பல்லவர் வடமொழியை மட்டுமே வளர்த்தனர்-130; தண்டன் தோட்டச் செப்பேடு கூறும் கதை-131; தமிழ் நாட்டு வேதியரும், பல்லவரால் இறக்குமதி செய்யப் பெற்ற வேதி யரும்-132; பல்லவர் தமிழ்நாட்டு வேதியரை ஆதரிக்க வில்லை-133; இவ்வேதியர்கள் சிவ வழிபாட்டையும், திருவைந்தெழுத்தையும் போற்றுபவர்கள்-134; சேக் கிழார் இந்த நுணுக்கத்தை அறிந்தே இருந்தார்-137; வைதிகர்கள் இதனை எதிர்த்தனர்-138; தமிழால் வழிபடுதலை எதிர்த்தனர்-139; ஞானசம்பந்தர் இக் கூட்டத்தாரை மறைமுகமாக, ஆனால் முழு மூச்சாக எதிர்த்தார்-140; பாண்டி நாட்டிலும் ஏறத்தாழ இதே நிலைதான்-144; வைதிகத்தை நேரிடைத் தாக்குதல் செய்யாமல் மறை முகமாகத் தாக்கினார் பிள்ளையார்-இதற்குக் காரணம்-147. - அடிக்குறிப்புக்கள்-148. திருஞானசம்பந்தர் கூறும் சைவம் பிள்ளையார் புராணத் தொடக்கத்திலேயே அவர் செய்யப் போகும் புரட்சியை நினைத்துச் சேக்கிழார் குறிப்பாகப் பல கருத்துக்களைக் கூறுகிறார்-149; வேத வேள்வியை மறுத்துச் சிவவேள்வி செய்வதாகச் சேக்கிழார் கூறுவன-151; வேத வேள்வியைப் பிள்ளையார் நேரிடையாகத் தாக்காத காரணம்-152; மனத்தத்துவ அடிப்படையில் இதன் விளக்கம்-154; பிள்ளையார் உபநயனம் பற்றிக் கூறுகையில் சேக்கிழார் தரும் விளக்கம்-156; வைதிகச் சடங்குகளைக் காப்பியப் புலவர் மறைமுகமாகச் சாடியது-157; அத்யயனத்துக்கும் ஐந்தெழுத்தை ஒதுவதற்கும் உள்ள வேறுபாடு-160; இவ்வாறு புரட்சி செய்ய வரும் ஒருவருக்குத் தேவையானவை யாவை?-1 62; ஐந்தெழுத்தின் தனிச்சிறப்பு-164, பிள்ளையார் செய்த புரட்சியின் முடிவில் ஐந்தெழுத்து, அன்பு என்ற இரண்டை இன்றியமையாதவை ஆக்கினார்-166; ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய மணிவாசகரும் இதன் நுணுக் கத்தை அறிந்து இவை இரண்டையுமே திருவாசகத்தின் உயிர் நாடியாக்கினார்-168. அடிக்குறிப்புக்கள்-169, 17 0.
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/17
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை