மூவர் காலப் பின்னணி - | 47 சமணம், பெளத்தம், வைதிகம், வைணவம் என்பவை ஒவ்வொன் றும் தத்தம் கொள்கைகளே உண்மையானவை; உய்கதி அடைய விரும்புவோர் தம்மிடமே வரவேண்டுமென்று ஆளுக்கு ஒரு பக்கம் இழுக்கையில் இதனிடையே அகப்பட்டு எது வழி என்று தெரியா மல் அல்லல்பட்டுக் கலங்கி நிற்கும் மக்கட் கூட்டத்தை நெறிப் படுத்த ஒருவர் வந்தால், முதலாவது அம் மக்கள் மனத்தில் ஊட்ட வேண்டியது வலுவான நம்பிக்கையாகும். இறைவன் உளன் என்று கூறுவதனால் அனைவருக்கும் நம்பிக்கை ஏற்பட்டு விடாது. எனவே மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் அவர்கள் "துன்பம் நீங்கும்; துயரம் போகும் என்று கூறுவதுடன் இது சத்தியம்; இதை நம்பலாம் என்ற கருத்தில் ஆணை நமதே' என்றும் பாடினார் பெரியார். எனவே திருக்கடைக் காப்புப் பாடலையும், அதன் பயன் யாது என்பதனையும் புரட்சிவீரராகிய பெருமான் பாடியது அன்றைய சமுதாயத்திற்கு ஒரு ஊன்று கோல் தருவதுபோல உதவுதற்கேயாம். வைதிகத்தை நேரிடைத் தாக்குதல் செய்யாமல் மறைமுகமாகத் தாக்கினார் பிள்ளையார்-இதற்குக் காரணம் இனி இப் பெருமகனார் போராடிய பிற சமயங்களை நேரிடைத் தாக்குதல் செய்தது போல வைதிக சமயத்தைத் தாக்க முடியாது. காரணம் வேள்வி முதலியவற்றில் அவர்கள் பெரு நம்பிக்கை வைத்து அதனைக் கடைப்பிடித்தாலும் சிவபெருமானை ஒரளவு ஏற்றுக் கொண்டவர்களாவார்கள். இந்த நிலையில் அவர்கள் கூறும் வேதம் முதலியவற்றை ஏற்றுக் கொள்ளாதவர்களைப் பெளத்தர்கள் என்று பெயரிட்டு ஒதுக்கி விடுவர். அவ்வாறு அவர்கள் ஒதுக்க இடந்தரக் கூடாது. பெளத்த, சமணர்களால் அல்லலுற்ற ஒரு சமுதாயத்தைக் கை தூக்கிவிட வரும் பெரியவரை வைதிகர்கள் பெளத்தர் என்று ஒதுக்கி விட்டால் மக்கள் மத்தியில் அவர் ஒன்றுஞ் செய்ய முடியாமற் போய்விடும். எனவே பிள்ளையார் மிக மிகக் கவனத் துடன் வேதத்தை ஏற்றுக் கொண்டே பாடுகிறார். இப் பெருமக னார் எவ்வாறு தம்புரட்சியை நடத்துகிறார்? என்பதை அடுத்துக் காணலாம்.
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/175
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை