8.திருஞானசம்பந்தர் கூறும் சைவம் பிள்ளையார் புராணத் தொடக்கத்திலேயே அவர் செய்யப்போகும் புரட்சியை நினைத்துச் சேக்கிழார் குறிப்பாகப் - பல கருத்துகளைக் கூறுகிறார்; ஏழாம் நூற்றாண்டில் திருநாவுக்கரசருக்கு முதுமைப் பருவம் வந்துற்ற காலத்தில், இவ் உலகிடைத் தோன்றியவர் திருஞான சம்பந்தர். இவ்வாறு கூறுவதற்குத் தக்க காரணம் உண்டு. முதன் முதலாகத் திருஞானசம்பந்தரைக் காணவேண்டும் என்ற விருப்பால் காழிப் பதியுள் வருகிறார் நாவரசர். அவர் வருகிறார் என்பதைக் கேள்வியுற்ற, கவுணியக் கன்று', 'ஆக்கிய நல்வினைப் பேறு எனக் கூறிக்கொண்டு அவரை எதிர்கொள்ளச் சென்றாராம். வருகின்ற திருநாவுக்கரசரின் வடிவம் இருந்த நிலையைக் கூறவரும் சேக்கிழார் , 'சிந்தை இடையறா அன்பும் திருமேனி தனில் அசைவும் கந்தைமிகையாம் கருத்தும் கைஉழ வாரப்படையும் வந்திழி கண்ணிர் மழையும் வடிவிற் பொலிதிரு நீறும் அந்தமி லாத்திரு வேடத் தரகம் எதிர்வந் தனையட்' என்று பாடுதல் சிந்தனைக்குரியது. அதிலும் 'திருமேனிதனில் அசைவும் என்ற சொற்களால், நாவரசர் காழியுள் நுழைகின்ற பொழுது வயது முதிர்ந்தவராகவே இருந்தார் என்று கொள்ள முடிகிறது. $. நாவரசர் சமணம் புகுந்ததும், மீண்டதும் அல்லற்பட்டதும், தேவாரம் பாடத் தொடங்கியதும் ஆகிய அனைத்து நிகழ்ச்சி களும் பிள்ளையார் இவ்வுலகிடைத் தோன்றுமுன்பே நடை பெற்றிருக்க வேண்டும். இதனை வலியுறுத்த ஒரு காரணம் உண்டு. திருநாவுகரசர் தம் பாடல்களில் அதிகம் கூறாத சில சிந்தனைகள் பிள்ளையார் பாடல்களில் முதன் முதலாக ஏன் தோன்றுகின்றன என்பதை அறியவே இக் கருத்து இங்கே கூறப் பெறுகிறது. .
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/177
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை