திருஞானசம்பந்தர் கூறும் சைவம் 五 55 ஆதிக்கத்தை எதிர்த்துத் தோன்றியதாகும். இப் புரட்சியை வளர்த்தவர்கள் நட்ைமுறைக்கு உகந்த ஆக்கபூர்வமான வழி களைக் கூறினர். வேத வழக்கொடுபட்ட தெய்வங்களான இந்திரன், வருணன் என்பவர் வீழ்ச்சியடைந்தமையாலும், மிக உயர்ந்த ஞானவழி போதிக்கும் உபநிடதங்கள் சாதாரணப் பொதுமக்கள் மனத்தைக் கவராமையாலும், மக்கள் இவ் வேத வழக்கிற்கு மாறுபட்ட தம் பழைய சமயங்களை மறுபடியும் நாடலாயினர். இந்தப் புது வழியை வகுத்தவர்கள் ஒன்றை நன்கு அறிந்திருந்தனர். எவ்வளவுதான் வேதவழக்கம் செல்வாக்கிழந்தாலும் வேதத்தின் செல்வாக்கு மேட்டுக்குடி மக்கள், அறிஞர்கள், என்பவர்களை விடாமல் பற்றி நின்றது. எனவே வேதத்தை விடாமல் உடன் வைத்துக் கொண்டு மக்களிடைச் செல்வாக்குடன் இருந்த ஆரியரல்லாதவர்களின் சமயக் கோட்பாடுகளையும் ஒருங்கிணைக்க முன்வந்தனர். இந்தப் புதிய சமயத்தைப் பற்றிக் கூறும்பொழுது முற்றிலுமாக வேதத்தைத் துறந்துவிட்டதாக அவர்கள் ஒருக்காலும் சொல்ல வில்லை. இதன் எதிராக இப் புதுச் சமயக்காரர்கள் வேதத் திற்குத் தாங்களும் உடன்பட்டவர்கள் என்றே வெளிப்படை யாகக் கூறினர். உண்மையில் ஒன்றும் இல்லை. இவ்வாறு பெயரளவில் கூறியதால் பல்வேறுபட்ட சமயக் கோட்பாடுகளை ஒருங்கிணைத்து இந்து சமயம் என்று கூற முடிந்தது. இன்றுள்ள இந்து சமயம் (சைவம்,வைணவம்) என்பவற்றின் தெய்வக் கதைகளில் (Myths) சமயப் பழக்கங்கள் என்பவை வேத வழக்கொடு மாறுபட்டவையே மிகுதியாக இருக்கக் காணலாம்.' இவற்றின் பெரும்பகுதி தென்னாட்டில் தோன்றியனவாகும். சுத்த பக்தி என்பது இந்தியாவின் சமயக்கோட்பாட்டிற்குத் தென் நாட்டின் கொடையாகும். சமூகத்தில் மாபெரும் புரட்சி செய்த, சமதர்மக் கொள்கைக்கு வடிவு கொடுத்த லெனின் தனி உடைமை என்ற சொல்லே இருத்தல் கூடாது எனக் கூறி வந்தார். ஆனால் இரஷ்ய நாட்டில் புரட்சியைத் தோற்றுவித்து அதற்கு வடிவு தருகின்ற நேரத்தில் சிறு சிறு நிலங்களை தனிப்பட்ட வர்கள் (kuluks) வைத்துக் கொள்ளலாம் என அநுமதித்தார். இந்தச் சிறிய விட்டுக்கொடுப்பினால் பெரிய காரியம் ஒன்றை அவரால் சாதிக்க முடிந்தது. அதேபோல ஞானசம்பந்தர் பக்தி வழியைப் போதிக்கும் முதல் குருவாக இருப்பினும் சடங்குகளை ஒரளவு ஏற்றுக்கொண்டே தம் கருத்தைப் பரப்பினார்.
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/183
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை