பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் கூறும் சைவம் I 59 மந்திரம் நான்மறை யாகி, வானவர் சிந்தையுள் நின்று அவர் தம்மை ஆள்வன செந்தழல் ஒம்பிய செம்மை வேதியர்க்கு அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே ' அதாவது 'நான் மறையின் முடிவான மந்திரமாக நிற்பதும், தேவர்களின் அகமனத்தில் தங்கி அவர்களை ஆள்வதும், செந்தழல் ஒம்பும் செம்மையான அந்தணர், அந்தியுள் ஒதுவதும் அஞ்செழுத்தேயாம்'என்பதே இதன் பொருள். அஞ்செழுத்தை நம்பி அந்தி செய்பவர் செம்மை வேதியர் என்றமையின், இஃதல்லாத பிற மந்திரங்களை அந்தியில் தியானிப்பவர் வேதியர் ஆகவும், செந்தழல் ஒம்புபவர்களாகவும் இருக்கலாம், ஆனால் செம்மையானவர்கள் என்று அவர்களைக் கூற முடியாது என்ற நுணுக்கத்தையும் சேக்கிழார் நன்கு விளங்கி கொண்டமையின் இக் கருத்தை விரிவாக 266ஆம் பாடலில் பாடுகிறார். வேத வழக்கொடுபட்ட சடங்கில் ஈடுபட்டவர்கட்கு இரண்டாம் பாடலில் உபதேசஞ் செய்த பிள்ளையார் பிராணாயாமம் முதலியவற்றில் ஈடுபட்டவர்களையும் அழைத்து, 'ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி, ஒண்சுடர் ஞான விளக்கினை ஏற்றி, நன்புலத் தேனை வழிதிறந்து, ஏத்து வார்க்கு இடர் ஆன கெடுப்பன அஞ்செழுத்துமே 1 4 என்று கூறுகிறார். அடுத்து, 'நல்லவர் தீயவர் எனாது நச்சினர் செல்லல்கெடச் சிவமுத்தி காட்டுவ '’ என்றும் 5 ஆம் பாடலில் மன்மதன் வாளியில்பட்டு நைபவர்களை யும் ஆட்படுத்துவது இதுவே என்றும் கூறுகிறார். அடுத்து மனித மனத் தத்துவத்தை நன்குணர்ந்த அப் புரட்சி வீரர், துயரம் எத்துணை அளவுவரினும் ஒருவனை இறுதியாகக் காப்பது இதுவே என்ற கருத்தில், . 'தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும் வெம்மை நரகம் விளைந்த போழ்தினும் இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும் அம்மை யினுந்துணை அஞ்செழுத்துமே '