பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 62 பெரியபுராணம் - ஓர் ஆய்வு வைணவர் என்ற பிரிவில் எப் பிரிவைச் சேர்ந்தவராயினும், வேதத்தை முழுவதுமாக ஏற்றுகொண்டு அவற்றின் உயர்ந்தது வேறு எதுவும் இல்லை என்றுதான் கூறிவந்தனர். இதில் ஒரு வேடிக்கை உண்டு. சிவனையோ , மகாவிஷ்ணு வையோ வேதம் முழுமுதற் பொருள் என்று ஏற்றுக் கொள்ளவே இல்லை. என்றாலும் பரிபாடல்காரர் 'மாயா வாய்மொழி உண்ரதர வலந்து வாய்மொழி ஒடை மலர்ந்த' என்று திருமாலை யும், காரைக்காலம்மையார் 'வேதப் பொருளானை,வேதத்துக்கு ஆதியனை' என்று சிவபிரானையும் கூறுவது புதுமைதான். அப்படி இருந்தும் இந்தச் சைவர்களும், வைணவர்களும் ஏன் வேதத்தை விடாமல் போற்றினர் என்பது சிந்திக்க தக்கது. ஒரு காலத்தில் இந்த நாட்டில் வேதம் பெற்றிருந்த செல்வாக்கே இதற்கு காரணமாகும். காஷ்மீரம் முதல் கன்னியாகுமரிவரை வேதத்தின் செல்வாக்கு ஓரளவு கொடிகட்டிப் பறந்தது உண்மை தான். வேதம் தொகுக்கப்பெறும் காலத்திற்கு முன்பே கூட விராத்தியர் போன்றவர்கள், வேதம் கூறும் பலி முதலியவற்றை எதிர்த்துப் போராடினாலும், அவர்கள் அதிகம் செல்வாக்குப் பெறவில்லை. மேலும் வேதத்தை எதிர்த்த சமணர், பெளத்தர் என்ற இருவரும் ஒன்று சேர்ந்து போராடி இருந்தால் ஒருவேளை நிலைமை மாறியிருக்கலாம் போலும். ஆனால் அவர்கள் தம்முள் சண்டை இட்டுக்கொண்டு ஒருவரை ஒருவர் அழித்துக் கொண்டனர். வேதத்தை எதிர்த்த இந்த இரண்டு சமயங்களும், நலிந்து தேய்ந்ததைக் கண்ட பிறர் தாமும் வேதத்தொடு ஓரளவு மாறுபடினும், அதனை வெளியே பிறர் அறியக் கூறத் தயங்கினர் என்றும் கருத இடமுண்டு. இத்தகைய ஒரு சூழ்நிலையில் வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது ஒன்று உண்டு என்று கூறிவிட்டு அதை நிலை நிறுத்துவார் போல, அம்மெய்ப்பொருள் எதுவெனில் அதுவே மூலப்பொருளின் நாமமாக உள்ள ஐந்தெழுத்தாகும் என்று ஒருவர் கூறவேண்டுமாயின், அதற்கு எல்லையற்ற நெஞ்சு உரமும் புரட்சி மனப்பான்மையும், தாம் கூறியதை நிலைநாட்டும் ஆற்றலும் இருந்திருக்க வேண்டும். ಟ್ವಿಲ್ಲ புரட்சி செய்ய வரும் ஒருவருக்குத் தவையானவை யாவை? எனவே இதனைச் சுருக்கி வேறு வகையாகக் கூறவேண்டு மாயின் வேதத்தைவிட உயர்ந்தது ஒன்றைக் கூறுகிறேன்' என்று ருவர் கூறவேண்டுமாயின் பின் கண்டவை அவரிடம் இருத்தல் வண்டும். - . - -