திருஞானசம்பந்தர் கூறும் சைவம் I 63 1. அவர் வேதம், அங்கம் என்பவற்றை முற்றிலும் அறிந்த வராக இருத்தல் வேண்டும். 2. அறிதல் என்றால் வெறும் அத்யயனம் செய்பவராக இல்லாமல் அதன் சொற்பொருளையும் குறிப்புப் பொருளையும் நன்கு அறிந்தவராகவும் பிறர் வினாவிய வழி எடுத்துக் கூறி விளக்கக்கூடிய ஆற்றல் பெற்றவராக வும் இருத்தல் வேண்டும். 3. அன்றைய சமுதாய அமைப்பின்படி வேதம் ஒதி, முத்தீ வளர்க்கும் குடியில் பிறந்தவராகவும் அவர் இருத்தல் வேண்டும். 4. வேதம் ஒதுகின்ற விற்பன்னர்களும் வேள்வி செய்கின்ற ஆச்சார்யர்களும் பெற்றிருக்கும் ஆற்றலைவிட அதிக ஆற்றல் பெற்றவராகவும், தாம் கூறும் புதிய கொள்கையை நிலை நிறுத்தக் கூடிய வன்மை பெற்றவ ராகவும் இருத்தல் வேண்டும். 5. தம்மிடமுள்ள அமானுஷ்யமான ஆற்றலைப் பயன் படுத்துவதன் மூலம் தம் கொள்கை சரியானதே என்று மக்களிடையேயும், வேத விற்பன்னர்களிடையேயும் நிறுவும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். 6. தாம் கூறும் கொள்கை பழமைக்குப் புறம்பான புதுமை யானது அன்று என்றும், பழமையான அக் கொள்கைக் குப் புத்துயிர் கொடுத்துச் செழிக்கச் செய்வதே தம் பணி என்றும் அவர் கூறவேண்டும். 7. இவை அனைத்துடன் ஒப்பற்ற தன்னம்பிக்கை உடைய வராகவும், அஞ்சாமை உடையராகவும், மக்களிடம் நம்பிக்கை ஊட்டும் வன்மை படைத்தவராகவும் இருத்தல் வேண்டும். 8. பிறரிடம் வாதம் செய்து வெற்றி பெறுபவராகவும், கூடுமானவரை வாதத்தைத் தாமே மேற்கொள்ளாமல் பிறர் நெருக்கிய பொழுது அதுவும் தம்மால் முடியும் என்பதைக் காட்டுபவராகவும் இருத்தல் வேண்டும். 9. இவை அனைத்துக்கும் மேலாகத் தன்னடக்கம் உடையவ ராகவும் தன்னலம் அற்றவராகவும் பிறர் துயர் துடைக்கும் பெற்றி உடையவராகவும் பிற உயிர்கள் மாட்டுக் கருணை உடையராகவும் இருத்தல் வேண்டும்.
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/191
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை