திருஞானசம்பந்தர் கூறும் சைவம் 1 & 5 அடுத்துச் சடங்குகளே அனைத்தும் என்றும் அச் சடங்குகளில் கூறப்பெறும் மந்திரங்களே எல்லாம் என்றும் கூறும் வைதிகர் கட்கு எதிராக இவ்வாறு ஒப்பிப்பதில் பயனில்லை என்றும் கூறின வர் அவரே யாவார். எதிர்மறை முறையில் மட்டும் கூறி விட்டுவிடாமல் முதன் முறையாக காதலாகி, கசிந்து, கண்ணிர் மல்கி, ஒதினால்தான் ஐந்தெழுத்துங்கூட நல்ல நெறியில் செலுத்தும் என்று கூறினார். இது மிகமிகப் புதிய கருத்தாகும். இந்தப் புதிய கருத்தைக் கூறும்பொழுது மக்களிடையே இதன் தத்துவம் சென்று பரவ வேண்டும். அவர்கட்கு இதில் நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்ற கருத்தில் இம்மந்திரத்தை அவர் கூறும் முறையில் ஒதினால் கிடைக்கும் பயன்களையும் கூறுகிறார். 'நம்புவார் அவர் நாவில் நவிற்றினால் வம்புநாண் மலர் வார்மது ஒப்பது...' 'இயமன்தூதரும் அஞ்சுவர் இன்சொலால் நயம்வந்து ஒதவல்லார்.....'" 'கொல்வாரேனும் குணம் பல நன்மைகள் இல்லாரேனும் இயம்புவராயிடின், எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் நல்லார் நாமம் நமச்சிவாயவே '" "மந்தரம் அன பாவங்கள் மேவிய பந்தனையவர் தாமும் பகர்வரேல் சிந்தும் வல்வினை; செல்வமும் மல்குமால் நந்தி நாம நமச்சிவாயவே ' இவ்வாறு ஐந்தெழுத்தை நம்பிக்கையுடன் காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்க ஒதுவாரிடம், இயமன் தூதரும் வர அஞ்சுவர் என்றும், எத்துணை நற்பண்பும் இல்லாமல் பஞ்சமா பாதகங்கள் செய்தவராயினும் ஐந்தெழுத்தைக் காதலாகி ஒதுவர் எனின், அத் தீங்குகளிலிருந்து நீங்குவர் என்றும் கூறியது, மக்கள் மனத்தில் ஒரு நம்பிக்கையை வளர்த்து அவர்களைப் புதிய வழியில் செலுத்தவே ஆகும். காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி ஒதினால்தான் ஐந்தெழுத்தும் கூடப்பயன் தரும் என்ற கருத்து புதிது என்பது மட்டுமன்று. பிள்ளையார் நிறுவிய பக்திமார்க்கத்துக்குக் கடைகாலாய் அமைவதாகவும் உள்ளது.
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/193
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை