13 திருஞானசம்பந்தர் கூறும் சைவம் 16 7 பெற்றதாயினும் அதன் சுற்றுச் சுவர்கள், அன்பு என்ற கற்களால் கட்டப்பெற்றுள்ளன என்பதையும் விடாமல் கூறிக்கொண்டே செல்கிறார். 'வம்மின் அடியீர், நாண்மலர் இட்டுத் தொழுதுய்ய உம் அன்பினொடு எம் அன்பு செய்து ஈசன் உறை கோயில் ' 'அகனமர்ந்த அன்பினராய் அறுபகை செற்று ஐம்
- 호
புலனும் அடக்கி...... அரவ நீள் சடையானை உள்கிநின் றாதரித்து முன் அன்பு செய்தடி பரவுமாறு வல்லார் பழி பற்றறுப்பாரே' 'கையால் தொழுது தலை சாய்த்து உள்ளம் கசிவார்கள் மெய்யார்குறையும் துயரும் தீர்க்கும் விமலனார் என்பன அன்பின் தேவையைப் பிள்ளையார் வலியுறுத்திய பகுதி களாகும். இனிப் பிள்ளையாருடன் ஒருங்கு வாழ்ந்த நாவரசரும் இக் கருத்தை வலியுறுத்திச் சென்றதையும் காணலாம். 'அன்பெனும் பாசம் வைத்தார்' " தொண்டர் கூடித்தொழுது ஆடிப்பாடும் அன்பலால் பொருளுமில்லை..... 47 'இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார் கரப்பவர் தங்கட் கெல்லாம் கடு நரகங்கள் வைத்தார்..." 'இச்சையால் மலர்கள் தூவி இரவொடு பகலும் தம்மை நச்சுவார்க் கினியர் போலும் " - என்பவை வாக்கின் வேந்தர் கூற்றாம். இதில் இரப்பவர்க்கு ஈய வைத்தார்’ என்ற அடி தனிச் சிறப்புடையது. இறைவன்மாட்டு அன்பு செய்யவேண்டுமே தவிரப் பிற உயிர்கள் மாட்டு அன்பு தேவை இல்லைப் போலும் என்று தம்மைச் சமாதானம் செய்துகொண்டு, வன்கண்ணராய் வாழப் புகுந்தவர்கட்கு ஒர் எச்சரிக்கை செய்வது போல உயிர்கள் மாட்டு அன்பு செய்யவில்லையானால், கிடைப்பது கடு நரகமே என்றும் கூறுவது சமூகம்பற்றி இப்பெருமக்கள் கொண்டிருந்த பரிவு எத்தகையது என்பதை விளக்கும். -