பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. சேக்கிழார் கண்ட சைவம் பெரியபுராணம் என்று வழங்கப்பெறும் திருத்தொண்டர் புராணத்தைப் பாடிய சேக்கிழார் சென்னையை அடுத்துள்ள குன்றத்துTரில் பிறந்தவர். இக் குன்றத்துாரில் சேக்கிழார் கோவில் ஒன்றும் அதன் அருகே பாலறாவாயர் குளமும் இன்றும் உள்ளன. இவர் அநபாயன் என்று அழைக்கப்பட்ட சோழ மன்னனிடம் தலைமை அமைச்சராக இருந்தார். உத்தம சோழப் பல்லவராயன் என்ற பட்டமும் பெற்றுப் பெருஞ்சிறப் புடன் இருந்தார். சோணாட்டில் உள்ள திருநாகேச்சுரத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார். அதன் காரணமாகத் தம்முடைய சொந்த ஊரான குன்றத்துாரில் திருநாகேச்சுரம் என்ற பெயரில் ஒரு கோவிலைக் கட்டினார். - இப்பெருமகனாருடைய காலம்பற்றிப் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனினும் கி.பி.1113-1150 என்ற கால அளவில் ஆட்சி புரிந்த இரண்டாம் குலோத்துங்கன் காலத் தில்வாழ்ந்தவர் என்ற கொள்கையும், கி.பி. 1178-1218 என்ற காலஅளவில் ஆட்சி புரிந்த மூன்றாம் குலோத்துங்கன் காலத் தவர் என்ற கொள்கையுமே, எஞ்சியுள்ளன. இரண்டாம் குலோத்துங்கன் காலம் என்று கூறும் கொள்கையாளர்களே மிகுதி யாக இருத்தலின் இவருடைய காலம் 12ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியாகும் என்று கொள்வதில் தவறு இல்லை. ஞானசம்பந்தர் புரட்சியை அடுத்துத் தோன்றிய சங்கர அத்வைதம் - இவர் தோன்றவதற்கு 5 நூற்றாண்டுகளின் முன்னர்த் தோன்றிய திருஞானசம்பந்தரால் தொடங்கப்பெற்ற சமயப் புரட்சி நாளும் வளர்ந்து 9 ஆம்நூற்றாண்டளவில் முழு வளர்ச்சி பெற்றுத் திகழ்ந்தது எனச் சென்ற அதிகாரத்தில் கூறப்பெற்றது. மூவர் முதலிகள், அடுத்து வந்த மணிவாசகர், அவருக்குச் சற்று முற்பட்ட திருமூலர், முதலியோர் திருஞானசம்பந்தர் தொடங்கிய