சேக்கிழார் கண்ட சைவம் 17 3 படியாகப் பரக்கப் பேசுகிறார். தமிழின் பெருமையும் பேசுகிறார். ஒன்பதாம் தந்திரத்தில் 5ஆவது பகுதியாக உள்ளது தூல பஞ்சாக் கரம் என்பது. அடுத்துள்ள பகுதி சூக்கும பஞ்சாக்கரம். 7ஆவதாக உள்ள பகுதி அதிதுக்கும பஞ்சாக்கரம் என்பதாகும். ஐந்தெழுத்து என்றுதான் பிள்ளையாரும் அரசும் பேசுகின்றனரேயன்றி, பஞ்சாக்கரம் என்றோ அவற்றுள் தூலம், சூக்குமம், அதிதுக்குமம் என்றோ இவர்கள் இருவரும் ஒரு குறிப்பும் தரவில்லை. இவை அனைத்தும் திருமூலரின் காலம் மூவரில் இருவருக்குப் பிற்பட் டிருக்குமோ என நினைக்க இடந் தருகின்றன. பிள்ளையாரும், நாவரசரும் தில்லை என்றே கூறவும், திருமூலர் சிதம்பரம் என்ற பெயரை ஐந்து இடங்களிற் பயன்படுத்துவதும் இவர் காலத்தால் பிற்பட்டவர் என்பதை உணர்த்துகிறது. 'சிவசிவ என்கிலர் தீவினையாளர் சிவசிவ என்றிடத் தீவினை மாளும்' 2 என்றும் 'என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே என்றும் 'சிவனோ டொக்கும் தெய்வம் தேடினும் இல்லை 'பிறப்பிலி பிஞ்ஞகன் பேரருளாளன்' 'அரனடி சொல்லி அரற்றி அழுது பரனடி நாடியே பாவிப்ப நாளும் உரனடி செய்தங் கொதுங்கவல் லார்க்கு ' என்றுங் கூறலால் திருஞானசம்பந்தர் கூறிய மூன்றையும் இவரும் மேற் கொண்டவராகிறார். இனி அன்பின் இன்றியமையாமையை, 'அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்' என்ற அவர் கூற்றால் அறியலாம். திருமுறை வளர்ச்சியில் திருமந்திரம் ஒட்டவில்லை இந்த அளவில் திருமூலர் இங்கு வளர்ந்த சைவத்தைப் போற்றியவராகக் கொள்ளலாம். எனினும் இதற்கு மேல் அவர்
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/201
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை