பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 7 4 பெரியபுராணம்- ஓர் ஆய்வு படிப்படியாகக் கூறும் யோகம், சக்கரம், குரு முதலிய பகுதிகளை இவருக்கு முன்னும் பின்னும் வந்த சைவ சமயத் திருமுறைக் காரர்கள் யாரும் பேசவில்லை என்பதை அறிதல் வேண்டும். திருஞானசம்பந்தர் கூறிய சிவவழிபாடு, அபிடேகம், அர்ச்சனை, ஆடல் பாடல், ஐந்தெழுத்து, அன்புசெய்தல் என்பவைபற்றி அவருக்குப் பின் வந்த அனைவரும் பாடினார்கள் என்பதை அறிய முடிகிறது. ஆனால் இவை அனைத்தையும் ஏற்றுக் கொண்டே, யோக வழியை வகுத்துத் தந்த திருமூலரைப் பின் வந்தவர்கள் யாரும் பின்பற்றவில்லை என்பதையும் அறிதல் வேண்டும். எனவே திருமுறைகள் வளர்ச்சியில் 'திருமந்திரம் ஒட்டாமல் தனியே நிற்கின்றது. திருமுறைகள் கூறும் கருத்துக்களையும் திருமந்திரமும் ஏற்றுக்கொள்வதால், திருமுறை வைப்பில் இடம் பெற்றது போலும் என்றுதான் கூறல் வேண்டும். சித்தர்கள் கூட்டம் எட்டாம் நூற்றாண்டில் தொடங்கி ஒரு பரம்பரையை ஏற்படுத்திற்று. இச் சித்தர்கள் பல கூறாக இருந்துள்ளனர். இவர்கள் வழியே அலாதியானது. சேக்கிழாருக்கு முற்பட்ட காலத்திலேயே திருமுறை ஒதும் மரபு ஏற்பட்டுவிட்டது. இனிச் சேக்கிழார் காலத்துக்கு முற்பட்டதும் மணிவாசகர் காலத்துக்குப் பிற்பட்டதுமாகிய கால நிலையைக் காண்டல் வேண்டும். இராசராசன் முதலான சோழர்களும், இராச சிம்மன் முதலான பல்லவர்களும் பெரிய அளவில் சிவன் கோவில்களைக் கட்டியது உண்மைதான். என்றாலும் இக் கோயில்கள் தமிழ் நாட்டுச் சிவ வேதியர் ஆட்சியில் இருந்தனவா என்பது ஐயத் திற்கு உரியதே. இராசராசனுக்கு முன்னரே திரு எறும்பியூர், திருப்பழுவூர், திரு ஆவடுதுறை, அல்லூர், குமாரவயலூர், அந்துவ நல்லூர் என்ற இடங்களில் திருப்பதிகம் ஒதப் பெற்றது எனக் கூறும் கல்வெட்டுக்கள் உள்ளன. நம்பியாரூரரின் திருத் தொண்டத் தொகையில் இடம்பெற்ற அடியார் பலருக்கும் திருக்கோயில்களில் படிமங்கள் வைத்து வழிபடும் பழக்கம் இருந் துள்ளது என அறிய முடிகிறது. இத்துணை அளவு சைவ சமயம் வளர்ந்திருப்பினும் ஏதோ ஒரு குறை இருப்பதைச் சேக்கிழார் உணர்கின்றார். தலைமை அமைச்சராக இருந்த காரணத்தால் பல ஊர்கட்கும் சென்று வரும் வாய்ப்புடையவராகவும் அவர் இருந்திருப்பார். இடைக்காலச் சோழர்கள் ஆட்சியில் அவர்கள்