சேக்கிழார் கண்ட சைவம் I 75 கொண்ட வெற்றிகள் காரணமாகத் தமிழ்நாட்டில் பாலும் தேனும் பெருக்கெடுத்து ஒடிற்று என்று கூறினால் அதில் தவறு இருக்க முடியாது. அப்படியானால் குறை எங்கே வந்தது? ஏழாம் நூற்றாண்டில் புரட்சிவீரர் கட்டிய சைவக் கோட்டை அப்படியே வளர்ந்த நிலையில் இருப்பது உண்மைதான். எனினும் அதில் உள்ளீடு இல்லையோ என்று ஐயுறவு ஏற்படுகிறது. மக்கள் உண்மையான சமய வாழ்க்கையில் ஈடுபடாமல் போலியான மேலோட்டமான சமய வாழ்வில் ஈடுபடுகின்றனர் என்று சேக்கிழார் நினைக்கின்றார். இதன் காரணம் என்னவாக இருக்கும்? எல்லையற்ற செல்வம் மனிதனை நிலைகுலையச் செய்துவிடும். இடைக்காலச் சோழர் ஈடு இணை இன்றிப்பெற்ற வெற்றிகளால் மக்கள் வாழ்க்கையில் இன்ப வேட்டை இடம் பெற்றுவிட்டது போலும்! எனவே சமய வாழ்க்கை உள்ளிடற்றதாய்ப் போய்விட்டது. எல்லையற்ற செல்வம் மக்களைக் குறிக்கோளற்ற வாழ்க்கை வாழுமாறு செய்துவிட்டது. அதனை உணர்ந்த சேக்கிழார் ம்ே போக்க ஒரு வழி தேடினார். இத்தகைய நேரத்தில் தேவாரம் முதலியவற்றில் உள்ளந் தோய்ந்து படிந்திருந்த அவர் 'இந்த நாயன்மார்களின் வரலாறு இன்ப வேட்டையாடும் மக்களைத் தட்டி எழுப்பி, வாழ்க்கை யில் ஒரு குறிக்கோள் வேண்டும் என்ற எண்ணத்தை அவர்களிடம் உண்டாக்கும்' என்ற முடிவுக்கு வந்தார். அதன் பயனாகத் தோன்றியதே இந்தப் பெரியபுராணம். இந்த நாட்டு மக்களைத் தூண்டுவதற்கு இங்கு வாழ்ந்த, அவர்களின் முன்னோர் வரலாறு பயன்படுவது போல, பிற நாட்டுப் பெரியார் வரலாறுகள் பயன்படா. எனவே இப் பெரியார்களின் வரலாறுகளைத் தாம் அறிந்த முறையில் பாடாமல் நம்பியாரூரர் பாடிய திருத் தொண்டத் தொகையின் அடிப்படையிலேயே பாடவேண்டும் என்ற முடியும் அதை ஒட்டி வந்ததேயாகும். ஆரூரரின் திருத்தொண்டத் தொகைக்கு விரி பாடினவர் நம்பியாண்டார் நம்பிகளாவார். அவருடைய திருத்தொண்டர் திருவந்தாதி, ஆரூரரின் ஓர் அடி வரலாற்றுக்கு விளக்கமும் விரிவும் தந்தது. ஆனால் நம்பியின் பாடல்களில் உள்ள அனைத்து விவரங்களையும் சேக்கிழார் எடுக்க விரும்பவில்லை. அவற்றைத் துணையாகக் கொண்டு தாமே பல ஊர்கட்கும் சென்று அந்தப் பகுதியில் வாழ்ந்த அந்த நாயன்மார்களின் வரலாறுகளை அறிந்துள்ளார். நாயன்மார்களின் தேவாரங்களைத் துணை
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/203
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை