பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் கண்ட சைவம் 17 9 தழைக்க ஒரு மகன் வேண்டும் என்று தவம் புரிந்தனர். சோழ நாட்டில் ஒரு தமிழ்க் குடும்பத்தார் இத் தமிழச் சாதி அழிந்து போவதை நினைந்து வருந்தி அதனைப் போக்க ஒரு மகனை விரும்பித் தவம் செய்தனர். எனவேதான் பிள்ளையார் அந்தக் குடும்பத்தில் பிறந்தார். எண்ணியர் திண்ணியராகப் பெறின் எண்ணிய வற்றப்ை பெறமுடியும்' என்ற கொள்கை இக் குடும்பத்தார் விஷயத்தில் உண்மையாயிற்று. இதன் எதிராகப் பாண்டி நாட்டிலும் ஒர் அம்மையார் இக் கவலையால் பீடிக்கப்பட்டு வருந்தினார். அவர் தவமும் சீர்காழிக் குடும்பத்தார் தவம் போன்றதேயாகும். அப்படி யானால் பிள்ளையார் ஏன் அங்கே பிறக்கவில்லை? பாண்டி நாட்டு அம்மையாரைப் பொறுத்தமட்டில் இது நிறைவேற முடியாதபடி அவருடைய கணவரே இதற்குத் தடையாக இருந்தார். காதல் இருவர் கருத்து ஒருமித்து விரும்பியதால் இங்கே பிறந்தார் பிள்ளையார். ஆனால் பாண்டி நாட்டு மங்கையர்க்கரசியார் தவமும் எளிதானதன்று. எனவே அதுவும் நிறைவேறப் பிள்ளையார் அங்கே சென்று அந்த அம்மையாரின் தவம் பயன் பெறுமாறு செயலாற்றினார். இது சேக்கிழாரின் மனத் தத்துவ அறிவை விளக்க ஒர் இடமாகும். சிறந்த காப்பியப் புலவன் தான் எடுத்துக்கொண்ட கருத்தை விளக்கு முறையில், தொட்ட இடங்கள் அனைத்திலும் அக் கருத்தை நினைவூட்டவும் வலியுறுத்தவும் வாய்ப்புகளை நாடிப் பயன்படுத்த வேண்டும் என்பது திறனாய்வாளர் கொள்கை. பிள்ளையார் பிறந்தார் எனக் கூறவந்த கவிஞர்,

  • * * * * * * * * * *'சைவ முதல் வைதிகமும் தழைத்து ஓங்க '

'அண்டர் குலம் அதிசயிப்ப அந்தணர் ஆகுதி பெருக வண்தமிழ்செய் தவம்நிரம்ப மாதவத்தோர் செயல் வாய்ப்ப சீர்காழியில் அவதரித்தார் என்று கூறுகிறார். இதனை அடுத்துக் கவிஞர், 'திசையனைத்தின் பெருமையெலாம் தென்திசையே வென்றேற மிசையுலகும் பிறவுலகும் மேதினியே தனிவெல்ல அசைவில் செழும் தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறை வெல்ல