பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் கண்ட சைவம் I & I பிடித்து ஆளும் பொழுது சோழர்கள் முகவரி இல்லாமல் இருந்தனர். எனவே தென்திசை வென்றது என்று கவிஞர் எதனைக் குறிப்பிடுகிறார்? சங்க காலத்துக்கு முன்தொட்டுச் சிந்துவெளி நாகரிக காலத் திலேயே இந்தியா முழுவதும் பரவி இருந்த தொல்பழஞ் சமயமாகிய சிவ வழிபாடு, வைதிகத்தால் ஒதுக்கப்பெற்ற நில்ை, பின்னர் அது வலுக்கட்டாயமாகப் புகுந்த நிலை, சதருத்ரீயம் வரை வளர்ந்த நிலை என்பன பற்றிக் குறிப்பிடப்பட்டது. இந்த நிலையிலும் தென்திசை வந்த பல்லவர்கள், வாஜபேய யாகம் செய்தார்களே தவிரச் சிவ வேள்விகளில் ஈடுபடவில்லை என்பதனைத் தண்டன் தோட்டச் செப்பேடுகள் கூறுகின்றன என்றும் குறிக்கப்பெற்றது. அத்தகைய நிலைமாறிச் சிவ வேள்வி புரியும் நிலையை இத் தமிழகத்திற்குக் கொணர்ந்தவர் யார்? எனவே இதுவரை தென்திசையை வென்று அடிப்படுத்தி இருந்த சமயங்களுள் புத்தம், சமணம் என்பவற்றை வென்றதுடன் வைதிக சமயத்தை மடைமாற்றஞ் செய்து பிள்ளையார் சிவ வேள்வியில் புகுத்தியதால் தென் திசையே வென்றது என்றார். இவ்வாறு கூறவந்தவர் வடதிசை என்னாமல் எல்லாத் திசை களையும் என்று கூறியதன் காரணத்தையும் சிந்திக்க வேண்டும். வேத வழக்கொடுபட்ட வேள்வி மரபு, இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் மட்டுமே பரவி இருந்தது. அகில இந்தியாவிலும் அது பரவிற்று என்று கூறுவது உபசார வழக்கேயாம். வடகிழக்கில் பெளத்தம், சமணம், சாக்தம் என்பவை பரவி நின்று வேத வழக்கம் அப் பகுதியில் பரவ விடாமல் தடுத்து வந்தன. தமிழகத்தைப் பொறுத்தமட்டில் வேத வழக்கு, பெளத்தம், சமணம், சாக்தம் என்பவை வந்து மோதி இங்கிருந்த சைவத்தை அதுவரை அமிழ்த்தி இருந்தது என்பதைச் சரிதம் வல்லார் உணர முடியும். எனவேதான் ஞானசம்பந்தர் இவை அனைத்துடனும் போர் தொடுத்தாராகலின், பிற திசைகளைத் தென் திசை வென்றது என்று சேக்கிழார் கூறுவது வெற்றுரையன்று; பொருள் பொதிந்ததே என்பது விளங்கும். சைவம் வளர்த்த தமிழின் பெருமை இனி அடுத்துள்ள அடி 'அயல் வழக்குகள் அனைத்தையும் அசைவில்லாத தமிழ் வழக்கே வென்றது' என்பதாகும். வழக்கு என்பது மரபு என்னும் பொருளை உடைய பரியாயச் சொல் ஆகும். தமிழ் மரபு சங்க காலத்தில் இருந்த நிலை வேறு: சங்கப் பிற்காலத்தில் அது தாக்குண்டது. தமிழ் மரபை முதலில்