சேக்கிழார் கண்ட சைவம் 187 உணர்வு, அறிவு என்ற இரண்டு சொற்களின் பொருள் வேறு பாட்டையும் கவிஞர் அறிந்தே பயன்படுத்துகிறார் என்பதை அடுதத் பாடலின் முதல் இரண்டு அடிகளின் மூலம் அறியலாம். 'எப்பொருளும் ஆக்குவான் ஈசனே எனும் உணர்வும் அப்பொருள்தான் ஆளுடையார் அடியார்கள் எனும் அறிவும் ' என்று கூறுகிறார். பொருளைப் படைத்தல் ஈசன் தொழில் என் பதை அறிவதும் பேசுவது வேறு; உணர்வது வேறு; இராவணனைப் பற்றிக் கூறவந்த கும்பகர்ணன், 'ஆயிரம் மறைப்பொருள் உணர்ந்து அறிவு அமைந்தாய் ' என்று கூற ஆயிரங்களான நீதி அவை உணர்ந்த தருமன் தேயம் வைத்து இழந்தான் சிச் சீ சிறியர் செய்கை செய்தான். ' என்று கவியரசர் பாரதியும் கூறுதல் காணலாம். அனைத்தும் ஈசன் படைப்பு என்பதை உணர்ந்தவர்கள் விருப்பு வெறுப் பின்றிச் சமநிலை உடையவர்களாக இருப்பர். எனவே, 'ஆக்குவான் ஈசனே எனும் உணர்வு பெற்றார்' என்று பாடும் கவிஞர் அடுத்த அடியில் 'அப்பொருளை ஆளுகின்றவர்கள் அடியார்களே' என்ற அறிவைப் பெற்றார் என்று கூறுகிறார். உலகிடை உள்ள பொருள்களை இவ்வாறு ஆள வேண்டும் என்பது அறிவின் துணைகொண்டு, ஆய்ந்து அறிய வேண்டிய ஒன்றாகலின் 'அறிவும் என்று கவிஞர் பேசுகிறார். எனவே இரண்டு சொற்களுக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்தே பயன் படுத்துகிறார் என்பது நன்கு விளங்கும். பிள்ளையார், நாவரசர் பாடல்களில் இராவணன் குறிப்பு ஏன்? பிள்ளையாரின் முதல் பாடல் தொடங்கி, ஒவ்வொரு பதிகத் திலும் எட்டாவதும் பாடல் இராவணனைபப்பற்றியே பேசும். இது ஏன் என்று யாருங் கூறவியலாது. சங்கப் பாடலில் இராவணனுடன் அகத்தியன் இசைவாது செய்தான் என்ற குறிப்பு வருகிறது. ‘தென்னவற் பெயரிய துன்னருந் துப்பில் தொன்முது கடவுட் பின்னர் மேய....'" என்ற இந்த வரிகட்கு நச்சினார்க்கினியர் இராவணன், அகத்தியன் என்ற இருவரிடையே நடைபெற்ற இசைவாது என்று
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/215
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை