I 88 பெரியபுராணம்- ஓர் ஆய்வு பொருள் விரிக்கிறார். இந்த வரிகட்கு இது தான் பொருளா என்று கூறுதல் இயலாது. இனிச் சிறுபாணாற்றுப்படையில் இராவணன் பெயர் கூறப்படாமல், அவன் ஊராகிய இலங்கை பேசப்படுகிறது. 'நறுவி நாகமும் அகிலும் ஆரமும் துணையாகு மகளிர்க்குத் தோள்புனை ஆகிய பொருபுனல் தருஉம் போக்கரு மரபின் தொன்மா இலங்கை...... > 37 என்ற அடிகளும், இவற்றையல்லாமல் அகப்பாடல்கள் இரண்டில் இராமன் பற்றிய குறிப்புகளும் வருதலின் இராவணன்பற்றியும் தமிழர் அறிந்திருந்தனர் என்று கோடலில் தவறு இல்லை. இவற்றை அடுத்து இராவணன் கயிலை மலையை எடுத்து அவதியுற்றதை, 'இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன் உமையமர்ந்து உயர்மலை இருந்தனன் ஆக ஐயிரு தலையின் அரக்கர் கோமான் தொடிப் பொலி தடக்கையிற் கீழ்ப்புகுந்து அம்மலை எடுக்கல் செல்லாது உழப்பவன் போல " என்று குறிஞ்சிக்கலியின் இரண்டாம் பாடல் விரிவாகப் பேசுகிறது. இந்த அளவில் நோக்கினால் தமிழக மக்களுக்கு, இராவணன் கதை நன்கு அறியப்பட்டிருந்த ஒன்று என்று நினைய வேண்டியுளது. என்ன காரணத்தால் இராவணனை ஒவ்வொரு பதிகத்திலும் குறிப்பிடுகிறார் ஞானசம்பந்தர் என்பதற்குச் சேக்கிழாரும் விளக்கம் தர இயலவில்லை. இதனிடையில் இராவணன் பற்றிப் பேசுகின்ற பிள்ளையார், சில புதிய தகவல்களையும் தருகின்றார்.
- - - - - - - * * * - - - - - - * *
கடற்படை உடையஅக் கடலிலங்கை மன்னனை அடற்பட அடுக்கலில் அடர்த்த அண்ணல் அல்லையே ’’ 'இருபது கரத்தோடு ஒல்க வாலினாற் கட்டிய வாலியார் வழிபட மன்னு கோயில்......'" இவையன்றித் திருநாவுக்கரசரும் பதிகத்தின் பத்தாவது பாடல் தோறும் இராவணன் பற்றிப் பாடுகிறார்.