சேக்கிழார் கண்ட சைவம் 1 9 I 1. 'அங்கதிரோ னவனை அண்ணலாக் கருத வேண்டா செங்கதிரோன் வணங்குந் திருச்சோற்றுத் துறை யனாரே' ' 'அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில் அருக்கனாவான் அரனுரு அல்லனோ' 'எரிபெருக்குவர் அவ்வெரி ஈசனது உருவருக்கம தாவது உணர்கிலார்' " 'வேதம் ஒதிலென் வேள்விகள் செய்யிலென் நீதி நூல்பல நித்தல் பயிற்றிலென் ஒதி அங்கமோ றாறும் உணரிலென் ஈசனை உள்குவார்க் கன்றி இல்லையே' " 'ஆலை வேள்வி அடைந்தது வேட்கிலென் ஏல் ஈசன் என்பார்க் கன்றி இல்லையே' 'செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று பத்தி செய் மனப் பாறைகட் கேறுமோ?" ‘பேயர் பேய்முலை உண்டுயிர் போக்கிய மாயன் மாயத்துட் பட்டமனத்தரே " என்ற இவற்றுள் ஒன்றும், இரண்டும் வைதிகத்தைக் சாடினவாம். 3,4,5 என்பவை சிவ வேள்வியல்லாத வேள்வி செய்வோரைச் சாடினவாம். 6,7 என்பவை வைணவத்தைச் சாடினவை. இந்தச் சாடலுக்குச் சற்றும் குறையாத முறையில் திருமழிசை ஆழ்வார், 'அறியார் சமணர் அயர்த்தார் பெளத்தர் சிறியார் சிவப்பட்டார் வெறியாய மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாத ஈனவரே ஆதலால் இன்று 'குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர்பெய்து மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி, கறை கொண்ட கண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான் அண்டத்தான் சேவடியை ஆங்கு
- 52
என்று பாடுவதை நோக்குகையில் இப் போராட்டம் நாவரசர் காலத்தில் மிகுதியும் வலுப்பெற்றிருந்திருக்கும் போலும் என்று நினைய வேண்டியுளது. புறச் சமயிகளாகிய பெளத்தர் சமன்ர்