பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 பெரியபுராணம்- ஓர் ஆய்வு ஒரு தனி மனிதன் அவர்கள் சமயத்தை விட்டு வேற்றுச் சமயம் புகுந்தால் இதனால் நட்டமடைபவர்கள் சமணத் துறவிகளே தவிர அரசனல்லன். அவனுடைய ஆளுகையில் சமணர், வைணவர், பெளத்தர் எனப் பலரும் உளரல்லரோ? எனவே, ஒரு தனி மனிதன் ஒரு சமயத்தைவிட்டு மற்றொன்றுக்குச் சென்றால் அரசனுக்கு அதனால் ஒன்றும் நட்டமில்லை. அப்படி இருக்கவும் தங்கள் சமயத்திற்கு ஓர் இழுக்கு ஏற்பட்டது என்று அவர்கள் கூறினால் அரசன் அது பற்றிக் கவலைப்படாமல் இருந்துவிடலாமல்லவா? ஆகவே சூழ்ச்சி மிக்கவர்களாகிய அத் துறவிகள் நின் சமயம் ஒழித்தார் என்றும் 'உன்னுடைய நிலை நின்ற தொல் வரம்பின் நெறியழித்த பொறி இலி' என்றுங் கூறி. அவனுடைய அகங்காரத்துக்குத் துன்பம் போட்டனர். மன்னன் உடனே காவலரை அழைத்து, "தெருள் கொண்டோர். இவர் சொன்னார் தியோனைச் செறுவதற்குப் பொருள் கொண்டு விடாதென் பால் கொடுவாரும் " எனக் கூறினான் என்று பாடுகிறார் சேக்கிழார். இப் பல்லவ மன்னன் ஆட்சிபற்றி சேக்கிழார் எவ்வளவு மட்டமான கருத்துக் கொண்டிருந்தார் என்பதற்கு இதைவிட உதாரணம் தேவை இல்லை. இந்த முறையில் சேக்கிழார் கூறுவதை எடுத்துக்காட்டி 'இப் பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் சொற்களைக் கொண்டே இவ்வாறு கவிஞர் கூறினார்' என்றும்,' அவன் எழுதிய மத்த விலாசப்பிரகசனம் என்ற நாடகத்தில் நாட்டின் நீதிபதி களே கையூட்டும் பெறுகிறார்கள் என்பதை அவனே எழுதி யுள்ளான். எனவே சேக்கிழார் அந் நூலைப் ன்ேே இவ்வாறு கூறுகிறார் என்றும் முடிக்கிறார் இராசமாணிக்கனார் தம்முடைய பெரிய புராண ஆராய்ச்சி என்ற நூலில். தலைமை அமைச்சராக இருந்து பெற்ற அனுபவத்தால் அரசனிடம் முறையிடுபவர்கள் எந்த முறையைக் கையாள வேண்டும் என்பதனையும், அரசியல் அலுவலர்கள் பெரும்பாலும் எவ்வாறு உள்ளனர் என்பதையும் கவிஞர் கூறிக்காட்டுகிறார். அரசன் பிறசமயத்தானாயினும் ஆட்சி செய்ய வேண்டிய முறை இனி ஒர் அரசன், அரச சட்டத்தை மீறித் தவறு புரிந்த ஒருவரை அச் சட்ட அடிப்படையில் விசாரணை செய்து, தேவை