I 9 6 பெரியபுராணம்- ஓர் ஆய்வு 'என்ன தண்டனை வழங்கலாம்?' என்று கேட்பது நான்காவது குற்றம், எனவே தான் இப் பல்லவ மன்னன் பெயரையோ பட்டப் பெயரையோகூடக் கூறக் கவிஞருக்கு விருப்பம் இல்லை. அந்த மன்னன் இறுதியில் சைவனாக மாறி, சமணப் பள்ளிகளை இடித்துக் குணபரேச்சரம் என்ற கோயிலைக் கட்டினான் என்ற பொழுதுங்கூட அவனை மன்னிக்கக் கவிஞர் தயாராக இல்லை. பிற உயிர்கட்குத் துன்பம் செய்வதுபற்றிக் கவலைப்படாமல் துன்பம் இழைத்தல், புலைத்தொழில் எனப்பெறும். இம்மன்னன் அத்தகைய செயலில் இறங்கிவிட்டமையின், ‘பூபாலர் செயலர் மேற்கொள் புலைத் தொழிலோன் " என்கிறார் கவிஞர். அரசன் போரிட்டு நாட்டைக் கவர்வதைச் சேக்கிழார் வெறுக்கவில்லை அரசனாக இருப்பவன், போரில் ஈடுப்பதை அவனுடைய கடமை என்றும் உரிமை என்றும் இவர் கருதுகிறார். போரில் ஈடுபடுபவன் தமிழரல்லாத அரசனாக இருப்பினும் அவர் ஏற்றுக் கொள்கிறார். மூர்த்தி நாயனார் புராணத்தில், 'கானக் கடிதழ் வடுகக் கரு நாடர் காவல் மானப் படைமன்னன் வலிந்து நிலங் கொள்வானாய் யானைக் குதிரை கருவிப் படை வீரர் திண்டேர் சேனைக் கடலுங் கொடு தென்திசை நோக்கி வந்தான் "' 'வந்துற்ற பெரும்படை மண்புதையப் பரப்பிச் சந்தப்பொதியில் தமிழ் நாடுடிை மன்னன் வீரம் சிந்தச் செருவென்றுதன் னானை செலுத்து மாற்றால் சந்தப் பொழில்சூழ் மதுராபுரிக் காவல் கொண்டான்' " என்று பாடும்பொழுது இம்மன்னன் கருநாடகனாயினும், வலிந்து வந்து பாண்டியனைத் தோற்கடித்துப் பாண்டி நாட்டைத் தன்னடிப் படுத்தானாயினும் சேக்கிழார் அச் செயலைக் குறை கூற வில்லை என்பது கவனத்துக்குரியது. இம்மன்னன் தமிழர் ஆட்சியைப் போர் செய்து கவர்ந்ததைத் தவறு என்று கூறாத கவிஞர், அவன் குறிப்பிட்ட ஒரு சமயத் தாருக்குத் தீங்கு செய்ய முற்பட்டவுடன் சினங் கொள்கிறார். 艇 捣 & * & *_* 69 வாழுளு சடையான அடியாரை வண்மை செய்வான் 零k 够 唤 妙 8 碱 昭 银 வஞ்சகன் வெஞ்ச மண்பேர் எக்கர்க்குட னாக இகழ்ந்தன செய்ய எண்ணி '"
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/224
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை