சேக்கிழார் கண்ட சைவம் 2 Ü I களை ஒருவன் பயன்படுத்தி மிக நீண்ட தூரத்தில் வாழும் ஒருவருடைய வீட்டையோ, ஊரையோ தீமூட்டி அழிக்க முடியும். இத்தகையவர்கள் வாழ்ந்ததால் அவர்கள் மேற்கொண்ட சமயத் தைக் குறை கூறிப் பயன் இல்லை. சமயம் வேறு சமயிகள் வேறு என்பதை மனத்துட் கொள்ளவேண்டும். கி.பி. 9ஆம் நூற்றாண்டில் சமணத் துறவியின் இவ் எரி நூல் பரவலாக வழங்கிற்று. மேலும் 'யாவதும் உரையாடாமல் எண்ணத்திற் கவலை கொண்டு இருந்தான் ஏன்றால் ஏன் என்ற வினாத் தோன்றும் அன்றே! அதற்கு விளக்கம் பின்னர் இரு பாடல்களில் கூறப் பெற்றாலும் தன் செய்கை சரியா என்ற சுய ஆராய்ச்சியில் ஈடுபட்டதால்தான் வாளா இருந்தான் என்ற பொருளும்படக் கவிஞர் பாடிச் செல்கிறார். என்றாலும் சமணர் தம் சொற்படியே மந்திரத்தால் தீமூட்டு வாரா? வந்த அந்தணன் அஞ்சி ஓடிவிட்டானா? என்பவற்றை அறிய மன்னன் முயலவில்லை. எனவே சேக்கிழாருக்கு அவன் மேல் சினம் மூள்கிறது. என்றாலும் சொக்கப்பெருமான் மீனாட்சியுடன் மதுரையில் உறையக் காரணமாய் உள்ளவர் மங்கையர்க்கரசியாரே என ஞானசம்பந்தரே பாடிவிட்ட நிலை யில் "அவள் கணவனைப்பற்றி வேறு ஒன்றும் கடுமையாகக் கூறக் கவிஞர் ஒருப்படவில்லை. தேவாரங்களில் இப்பெரியார் எந்த அளவு தோய்ந்து அதன் நுணுக்கங்களை மேற்கொண்டு தம் புராணத்தை அமைத்துள்ளார் என்பதற்குப் பல எடுத்துக்காட்டுக் கள் கூறலாம். அவற்றுள் ஒன்றை இப்பொழுது காணலாம். மங்கையர்க்கரசியாரை விளித்துப் பேசுவதில் புதுமை மங்கையர்க்கரசியாரைக் காணும் முன்பே, தம்மை வரவேற்க வந்த குலச்சிறையார் கூறியவற்றைக்கொண்டே ஆளுடைய பிள்ளையார், 'மங்கையர்க் கரச் வளவர் கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி பங்கயச் செல்வி பாண்டிமாதேவி பணிசெய்து நாடொறும் பரவ பொங்கழல் உருவன் பூதநாயகன் நால் வேதமும் பொருள்களும் அருளி அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாய் - ஆவதும் இதுவே "'
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/229
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை