2 O 2 பெரியபுராணம்- ஓர் ஆய்வு என்று பாடிய பாடலின் நுணுக்கத்தை நன்கு அறிந்துகொண்டார் சேக்கிழார். அந்த அம்மையார் நாள்தொறும்பணி செய்து பரவுவதனால்தான் அப் பெருமான் அங்கயற்கண்ணியுடன் ஆல வாயில் உறைகிறான் என்றல்லவா பதிகம் பேசுகிறது. எனவே சிவபெருமானும் அமணர் நிரம்பிய மதுரையில் இருக்கிறான் என்றால் அது சோழன் மகளார் தொண்டு செய்யும் தைரியத்தால் தான் என்ற கருத்துப்படப் பாடல் முகிழ்க்கிறது. இனி மற்றோர் நுணுக்கமும் இதில் மறைந்துள்ளது. எத் துணைப் பெரிய குடும்பத்தில் பிறந்தாலும், எத்துணைச் சிறிய குடும்பத்தில் புகுந்தாலும், புகுந்த வீட்டிற்கு வந்தவிட்ட பிறகு பிறந்த இடத்தைக் கூறி அப் பெண்ணை யாரும் விளிக்கும் மரபு தமிழகத்தில் இல்லை. கணவன் வீடு புகுந்த பிறகு இன்னார் மனைவி என்று கூறுவது தான் மரபே தவிர, இன்னார் மகள் என்று கூறுதல் தமிழ் மரபுக்குப் புறம்பாகும். அப்படி இருந்தும் பிள்ளையார்'மங்கையக்கரசி, வளவர்கோன் பாவை, வரிவளைக் கைம்மடமானி, பங்கயச் செல்வி' என்றெல்லாம் கூறிவிட்டுப் பின்னரே, நினைவு வந்து கூறுபவர் போலப் 'பாண்டிமாதேவி என்று பாடும் நுணுக்கமும் சேக்கிழார் கவனத்திலிருந்து தப்ப வில்லை. பிள்ளையார் தம் கருத்தை வலியுறுத்துபவர் போல 9ஆம் பாடலில், - “மண்ணெலாம் நிகழ மன்னனாய் மன்னும் மணிமுடிச் சோழன் றன்மகளாம் பண்ணினேர் மொழியாள் பாண்டி மாதேவி!'...... 盘2 என்று பாடுகிறார். இதில் சிறப்பு என்னவெனில் முகவரியே இல்லாத சோழன் மணிமுடிச் சோழன் என முதலிற் சிறப்பிக்கப் படுகிறான். மாபெரும் மன்னனும் கணவனுமாகிய பாண்டியன் பின்னரே குறிக்கப்படுவதன் நோக்கம் ஒன்றே ஒன்றாகத் தான் இருத்தல் வேண்டும். பாண்டியன் எத்துணைப் பெரியனாயினும் தொல்பழஞ் சமயமாகிய சைவத்தை விட்டுவிட்டுச் சமணம் சார்ந்தமையின் பிள்ளையாரால் போற்றிப் பேசப்படும் நிலையை இழந்து விட்டான். இந் நுணுக்கத்தை உணர்ந்த சேக்கிழார் எல்லா இடங்களி லும் இதனைப் பயன்படுத்தலைக் காணலாம். முதன்முறையாகக் குலைச்சிறையார் தம்மை வரவேற்க வந்து வணங்குகையில் 'பாண்டிமாதேவிக்குஇறையருள் பெருக என்று கூறாமல்,
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/230
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை