பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் கண்ட சைவம் 2 0.3 'செம்பியர் பெருமான் குலமகளார்க்கும் திருந்திய சிந்தையிர்! உமக்கும் நம் பெருமான்றன் திருவருள் பெருகும் நன்மை தான் - வாலிதே' என்று கூறினார் எனச் சேக்கிழார் பாடுகிறார். திருக்கோயிலில் அரசியாரைக் கண்ட பிள்ளையார், 'பருங்கை யானை வாழ் வளவர்கோன் பாவையார் என்னப் பெருங் களிப்புடன் விரைந் தெதிர் அணைந்தார்' " என்றும் கூறுதல் நோக்கற்குரியது, அடுத்து அந்த அம்மையார் “யானும் என்பதியும் செய்த தவம் என் கொல் என்று வியக்கும் நேரத்திலும் ஞானசம்பந்தர் பாண்டியன் பெயரைக் கூடச் சேர்க்காமல், 'சூழுமாகிய பரசமயத்திடைத் தொண்டு வாழு நீர்மையிர் உமைக்காண வந்தனம் என்றார்' " என்று பாடுகிறார். இவ்வாறு பிள்ளையார் பாண்டியனைக் கூடுமானவரை ஒதுக்கியதைத் தன் நுண்மாண் நுழைபுலத்தால் அறிந்து கொண்ட காப்பியப் புலவர் தாமும் அக் கருத்தை விடாது பற்றிச் சந்தருப்பம் நேரும் போதெல்லாம் பேசுவது வியப்புக்குரியதாகும். தாம் எந்த வரலாற்றைப் பாடினாலும் அதற்குரிய சான்றுகள் தேடுவதும், சான்றுகள் கிடைப்பின் அவற்றை உரிய இடத்தில் பெய்து பாடுவதும் இப் பெருமகனாரின் தலையாய இயல்பாகும். காரைக்கால் அம்மையார் புராணத்தில் அவர் மிக இளங் குழந்தையாக இருந்த பொழுது மண்வீடு கட்டி விளையாடின நிலையிலும் சிவபெருமான் பற்றிய பேச்சிலும் விளையாட்டிலும் ஈடுப்பட்டார் என்ற பொருளில், 'வண்டல் பயில்வன வெல்லாம் வளர்மதியும் புனைந்த சடை அண்டர் பிரான் திருவார்த்தை அணைய வருவன பயின்று' என்று கவிஞர் பாடியது எந்த ஆதாரத்தைக் கொண்டு நம்பியா ரூரரின் திருத்தொண்டத் தொகை போகிற போக்கில் அம்மை யின் ஊரைக்கூட கூறாமல்,