பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 04 பெரியபுராணம்- ஓர் ஆய்வு 'பெருமிழிலைக் குறும்பர்க்கும் பேயர்க்கும் அடியேன்” 88 என்று கூறிச் செல்லவும், வழிநூல் என்று வழங்கப்பெறும் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதியில் 'நம்பன் திருமலை நான் மிதியேன் என்று தாள் இரண்டும் உம்பர் மிசைத்தலை யால்நடந்தேற உமை நகலும் செம்பொன் உருவன் என் அம்மை என் அம்மை எனப் பெற்றவள் செழுந்தேன் கொம்பின் உகு காரைக் காலினில் மேய குலதனமே "" என்று ஓரளவில் விளக்கந் தந்து பாடிச் செல்கிறார். ஆனால் இப் பாடலிலிருந்து காரைக்கால் என்ற ஊர்ப் பெயரை மட்டும் எடுத்தக் கொண்டு மற்றப் பகுதியை மாற்றிவிடுகிறார் சேக்கிழார். அம்மையார் தலையால் நடந்ததைக்கண்டு உமை சிரித்தார் என்றும், இறைவன் வருபவர் என்தாய்' என்றான் என்றும் பாடியது இந்த வரலாற்றுக்குப் பொருந்தவில்லை. அம்மையின் சிறப்பை அறிந்து கூறியதாக இல்லை. மேலும் அப்பனின் ஒரு பாதியாகிய உமை காரைக்காலம்மையின் அன்பின் ஆழத்தை அறியாமல் சிரித்தார் என்பது படு பைத்தியக்காரத்தனமாகும். எனவே சேக்கிழார் இந் நிகழ்ச்சியை மாற்றிப்பாடுகிறார். 'அம்பிகை திருவுள்ளத்தின் அதிசயித்து அருளித் தம்பெரு மானை நோக்கி ‘தலையினால் நடந் திங்கேகும் எம்பெருமான் ஓர் எற்பின் யாக்கை அன்பு என்னே? என்ன ?" 'வரும் இவள் நம்மைப் பேணும் அம்மைகாண் உமையே! மற்றிப் பெருமைசேர் வடிவம் வேண்டிப் பெற்றனள்..... 9 1 என்று அந்நிகழ்ச்சியை அற்புதமாக மாற்றிவிடுகின்றார். அவ் வாறாயின் குழவிப் பருவத்திலேயே இறைவன் பெயரைக் கூறினார் என்று கூற ஆதாரம் யாது? காரைக்கால் அம்மையார் அருளிச்செய்த அற்புதத் திருவந்தாதியின் முதல் பாடலே இதற்கு ஆதாரமாகும். 'பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்துநின் சேவடியே சேர்நதேன்-நிறந் திகழும்