10. சேக்கிழாரின் படைப்பாற்றல் நாட்டின் நிலை பெரியபுராணம் தோன்றக் காரணமாயிருந்தது. பல்வேறு காலத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த பல பெருமக்களை ஒன்று படுத்தி அடியார்கள் என்ற பெயரில், திருத்தொண்டத் தொகை பாடிச் செல்கிறது. அரசர் முதல் ஆண்டி வரையுள்ள இப் பெருமக்கள் சிவனடியார்கள் என்ற பொதுப் பெயருள் அடங்குவாரேனும், பொதுஇயல்பு என்று கூறத்தக்க ஒன்றிரண்டு பண்புகள் போக எஞ்சியவற்றில் இவர்கள் ஒருவருடன் ஒருவர் முற்றிலும் மாறுபட்டவராவர். அனைவருக் கும் சிவபெருமானிடத்து எல்லையற்ற பக்தி, மக்கள் தொண்டில் ஈடுபாடு, தம் கொள்கையில் உறுதி, ஒரு குறிக்கோளுடன் வாழ வேண்டும் என்ற மன ஊக்கம் என்பவை பொதுவானாலும் இவர் கள் பல்வேறு வகையான வாழ்க்கை முறைகளை உடையவர் களாவர். சிவனடியார்கள் என்ற ஒருமைப்பாடு ஒன்றை மட்டுங் கொண்டு இவர்களைத் திருத்தொண்டத் தொகையில் நம்பி யாரூரர் சுருக்கி கூறிவிட்டார். பின்னர் வந்த நம்பியாண்டார் நம்பியும் ஒவ்வொரு வரியில் கூறப்பெற்றுள்ள இந்த அடியார்களின் வரலாறுகளைப் பற்றிய செவிவழிச் செய்திகளைச் சேகரித்துப் பெரும்பாலான வரலாறு களில் ஒவ்வொருவர்க்கும் ஒரு பாடல் என்ற முறையில் பாடிவிட் டார். ஆனால் இவர்களின் மாறுபட்ட வரலாறுகளின் இடையே ஒர் ஒருமைப்பாட்டைக் கண்டு இக் கதைகள் ஒரு காப்பியஞ் செய்யத்தக்க கருக்களாக இருந்ததைச் சேக்கிழார் ஒருவரே காணமுடிந்தது. உதிரி வரலாறுகளை எந்த அடிப்படையில் ஒன்றுசேர்க்கலாம் என்று சிந்தித்த சேக்கிழார் சில அளவுகோல் களை நிறுவுகிறார். இவருடைய அளவுகோல்களின்படி உள்ளவர் களின் வரலாறுகள் பலவேனும் அவற்றுள் ஒர் ஒருமைப்பாட்டைக் கண்டு தம் காப்பியத்தின் கட்டுக்கோப்புக்கு அவற்றை உதவும் பொருள்களாக மாற்றிய பெருமை சேக்கிழாருக்கே உரியதாகும். தனிப்பாடல்களில் தனி வரலாறுகளைப் பாடிய நம்பிக்கு இவ் வரலாறுகளின் ஒருமைப்பாடு விளங்காமற் போய்விட்டது.
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/236
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை